கொழும்பு, தமிழக மீனவர்களின் 42 படகுகளை விடுவிக்க இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த படகுகள் வரும் 17ஆம் தேதி விடுவிக்கப்படும் என தெரி கிறது. தமிழக மீனவர்களை எல்லைத்தாண்டி மீன்பிடித்ததாக கூறி கைது செய்தும் இலங்கை கடற்படை அவர்களின் படகுகளையும் பறிமுதல் செய்வதை வாடிக்கையாக கொண்டுள்ளது. இதுவரை தமிழக மீனவர்களின் ஏராளமான படகுகள் பறிமுதல் செய்யப்பட்டு இலங்கையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இலங்கையில் உள்ள தமிழக மீனவர்களின் 42 படகுகளை விடுவிக்க அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த படகுகள் கடந்த 2015 ஆம் ஆண்டு பிப்ரவரி முதல் நவம்பர் மாதம் வரை பறிமுதல் செய்யப்பட்டதாகும். இந்த படகுகள் மனிதாபிமான அடிப்படையில் விடுவிக்கப்படுவதாக அந் நாட்டு நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இவை வரும் 17ஆம் தேதி விடுவிக்கப்படும் என தெரிகிறது.
இலங்கையில் பொருளாதார நெருக்கடியில் இருந்து மக்களை மீட்க முடியாத
மேலும்அங்கஜன் இராமநாதன் கோரிக்கை
மேலும்ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சார்பில் முன்னாள் அதிபர் மைத்திரிபால
மேலும்அதிபர் கோத்தபாய அரசாங்கம் சிங்கள பௌத்த மக்களுக்காகவும் தமிழ், முஸ்லிம்
மேலும்