ஐ.எஸ். அமைப்பின் தலைவர் அபு பக்கர் அல்-பக்தாதி கொல்லப்பட்டதாக சிரிய மனித உரிமை அமைப்பு தகவல் கூறியுள்ளது. கிழக்கு சிரியாவில் தேர் அஸ் ஸோர் பகுதியில் அவர் கொல்லப்பட்டிருக்கலாம் என்று சிரிய மனித உரிமை அமைப்பு தெரிவித்துள்ளது. இந்தத் தகவலை இதுவரை சர்வதேச ஊடகங்கள் ஊர்ஜிதப்படுத்தவில்லை. மேலும், ஈராக் தரப்போ குர்தீஷ் தரப்போ இதுவரை இந்தத் தகவலை உறுதிப்படுத்தவில்லை. இதற்கு முன்னரும் பக்தாதி கொல்லப்பட்டதாகப் பலமுறை தகவல்வந்துள்ளது. கடைசியாகக் கடந்த ஜூன் மாதம் கூட ரஷ்ய ராணுவத் தரப்பு, 'பக்தாதியைக் கொன்றுவிட்டோம்' என்று கூறியது. ஆனால், இதை அமெரிக்க தரப்பே மறுத்தது குறிப்பிடத்தக்கது. கடைசியாக கடந்த 2014-ம் ஆண்டு மொசூலில் இருக்கும் ஒரு மசூதியில் அவர் பொதுத் தளத்தில் தோன்றினார். அதன் பின்னர் அவர் எங்கிருக்கிறார் என்ற தகவல் யாருக்கும் சரியாகத் தெரியவில்லை.
நேற்று முன்தினம் ராணி எலிசபெத்தின் உடல் அங்குள்ள செயிண்ட் கில்ஸ்
மேலும்இங்கிலாந்தின் ராணியாக சுமார் 70 ஆண்டு காலம் ஆட்சி புரிந்த, இரண்டாவது
மேலும்வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்
மேலும்இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை
மேலும்16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை
மேலும்