இலங்கையில் முப்படைகளில் இருந்து அனுமதியில்லாமல் விலகிய 4000 பேருக்கு மேற்பட்டோரை இலங்கை ராணுவம் கைது செய்துள்ளது. இலங்கையில் ராணுவம் உள்ளிட்ட முப்படையைச் சேர்ந்த வீர்ர்கள் சுமார் 4,000-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். முறையான அனு மதியில் மல் விடுமுறை எடுத்ததால் வீரர்களைக் கைது செய்துள்ளனர். இலங்கை ராணுவம் முன்னதாக நீண்ட கால விடுமுறை எடுத்த வீரர்களுக்கு விடு முறைக் காலத்தின் போதே பொது மன்னிப்பு வழங்கப்பட்டது. ஆனால், பொது மன்னிப்பு காலத்தில் சட்ட ரீதியாக சேவையிலிருந்து விலகிக்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. ஆனால், பொது மன்னிப்புக் காலத்தின் போது சட்ட ரீதியாகத் தங்கள் பணியிலிருந்து விலகாத 4,074 வீரர்களை இலங்கை ராணுவம் கைது செய்துள்ளது. இலங்கையின் முப்படைகளையும் சேர்ந்த இந்த வீரர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. கைது செய்யப்பட்ட வீரர்களில் 7 ராணுவ அதிகாரிகள், 3,241 ராணுவ வீரர்கள், 765 கடற்படை வீரர்கள், 68 விமானப்படை வீரர்கள் கைது செய்யப்பட் டுள்ளனர். இவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க பாதுகாப்பு அமைச்சகம் தயாராகி வருகிறது.
இலங்கையில் பொருளாதார நெருக்கடியில் இருந்து மக்களை மீட்க முடியாத
மேலும்அங்கஜன் இராமநாதன் கோரிக்கை
மேலும்ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சார்பில் முன்னாள் அதிபர் மைத்திரிபால
மேலும்அதிபர் கோத்தபாய அரசாங்கம் சிங்கள பௌத்த மக்களுக்காகவும் தமிழ், முஸ்லிம்
மேலும்