img
img

மொசூலில் குழந்தையுடன் வெடித்துச் சிதறிய தாய்... மனதை உலுக்கும் கொடூர சம்பவம்!
திங்கள் 10 ஜூலை 2017 12:56:52

img

ஐஎஸ் தீவிரவாதிகளின் பிடியிலிருந்த மொசூல் நகரத்தை ஈராக் அரசு இன்று மீட்டது. போர் உக்கிரமடைந்ததால் அங்கிருந்த மக்கள் வெளியேற்றப்பட் டனர். அப்படி வெளியேற்றப்படும்போது, தற்கொலைப் படையைச் சேர்ந்த பெண் தன் குழந்தை கையில் வைத்திருந்தபடியே வெடியை இயக்கச் செய்து இறந்துள்ளார். கையில் இருந்த அவர் குழந்தையும் இந்த சம்பவத்தில் வெடித்துச் சிதறியது. இப்படி அவர் செய்வதற்கு சில கணங்களுக்கு முன்னர் எடுக் கப்பட்ட போட்டோ தற்போது வெளியாகியுள்ளது. இந்த தற்கொலைப் படை தாக்குதலால் இரண்டு ஈராக் ராணுவ வீரர்களும் மரணமடைந்துள்ளதாக தக வல் வந்துள்ளது. 15 லட்சத்துக்கும் அதிகமானோர் வசித்து வந்த மொசூல் நகரை ஐஎஸ் தீவிரவாதிகள் 3 ஆண்டுகளுக்கு முன்பு கைப்பற்றிக்கொண்டனர். இதையடுத்து, கடந்த ஆண்டு அக்டோபர் மாதம், மொசூல் நகரை மீட்க அமெரிக்கா தலைமையிலான கூட்டுப் படையினரின் உதவியுடன்தீவிர தாக்குதலை ஈராக் ராணு வம் தொடங்கியது. இந்தப் போரினால் உயிர் பிழைப்பதற்காக 9 லட்சம் மக்கள் வேறு இடங்களுக்குப் புலம் பெயர்ந்தனர். இந்நிலையில் ஐஎஸ் பயங்கர வாதிகளுக்கும் இவர்களுக்கும் நேற்று உச்சக்கட்ட போர் நடந்தது. இதில் ஈராக் ராணுவம், மொசூல் நகரை ஐஎஸ் பயங்கரவாதிக ளிடமிருந்து முற்றிலுமாக கைப்பற்றியது.

பின்செல்

உலகச் செய்திகள்

img
ராணி எலிசபெத் உடலுக்கு அஞ்சலி செலுத்த நாள் கணக்கில் காத்துக்கிடக்கும் மக்கள்

நேற்று முன்தினம் ராணி எலிசபெத்தின் உடல் அங்குள்ள செயிண்ட் கில்ஸ்

மேலும்
img
ராணி எலிசபெத் மறைவு ஒரு சகாப்தத்தின் முடிவு

இங்கிலாந்தின் ராணியாக சுமார் 70 ஆண்டு காலம் ஆட்சி புரிந்த, இரண்டாவது

மேலும்
img
வெவ்வேறு ஆண்டுகளில் வெவ்வேறு தசாப்தங்களில் பிறந்த இரட்டையர்கள்

வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்

மேலும்
img
பத்திகையாளர் ஜமால் கசோகி கொலை வழக்கில் 5 பேருக்கு தூக்குத் தண்டனை

இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை

மேலும்
img
16 ஆயிரம் வீரர்களுடன் அமெரிக்காவில் விண்வெளி படை

16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img