லண்டன், பாகிஸ்தானில் குழந்தைகள் கல்விக்கு குரல் கொடுத்த மலாலா மீது தாலிபான் பயங்கரவாதிகளின் தாக்குதலுக்கு உள்ளாகி, கடும் போராட்டத்திற்குப் பின் உயிர் பிழைத்தார். இதனையடுத்து லண்டனில் தங்கி பள்ளி படிப்பை தொடர்ந்து வந்தார். அவ்வபோது குழந்தைகள் கல்வி மற்றும் பெண் சுதந்திரம் குறித்து பேசி வருகிறார். இந்த நிலையில் பள்ளி படிப்பை முடித்துள்ள மலாலா சொந்தமாக டுவிட்டர் கணக்கை துவங்கி உள்ளார். இவரது டுவிட்டர் கணக்கிற்கு மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ருடியூ உள்பட உலகம் முழுவதும் இதுவரை 4 லட்சத்துக்கும் அதிகமானோர் ஃபாலோவர்களாக உள்ளனர். டுவிட்டரில் மலாலா கூறியிருப்பதாவது: பள்ளி படிப்பை நான் முடித்து இருப்பது கசப்பு கலந்த இனிப்பு சம்பவமாக கருதுகிறேன். என்னுடைய எதிர் காலத்தில் ஆர்வமாக இருக்கிறேன். விரைவில் பெண்கள் கல்வியை உணர்த்தி உலக அளவில் பயணம் மேற்கொள்ள உள்ளேன். பெண் கல்விக்கான எனது உலகளாவிய போராட்டம் தொடரும் என பதிவிட்டுள்ளார். மலாலா 1997-ஆம் ஆண்டு பிறந்தார். 2014 ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு பெற்றுள்ளார். மிகவும் சிறு வயதில் இந்த பரிசினை பெற்றவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.
நேற்று முன்தினம் ராணி எலிசபெத்தின் உடல் அங்குள்ள செயிண்ட் கில்ஸ்
மேலும்இங்கிலாந்தின் ராணியாக சுமார் 70 ஆண்டு காலம் ஆட்சி புரிந்த, இரண்டாவது
மேலும்வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்
மேலும்இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை
மேலும்16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை
மேலும்