அகாபுல்கோ, மெக்சிகோ நாட்டின் குவாரெரோ மாகாணத்தின் கடற்கரை நகரான அகாபுல்கோ சுற்றுலாவுக்கு பிரசித்தி பெற்றது. அதேநேரம் போதை மருந்து கடத்தல் கும்பல் நடமாட்டம் அதிகம் இருப்பதாலும், அவர்களுக்கு இடையே தொழில்போட்டி காரணமாக அடிக்கடி மோதல் நடப்பதாலும் இந்த நகரில் சட்டம், ஒழுங்கு படுமோசமான நிலையில் காணப்படும். அகாபுல்கோ நகரம் வழியாகத்தான் அமெரிக்காவுக்குள் போதை பொருட்கள் கடத்தி செல்லப்படுகிறது. இந்த நிலையில், இந்த நகரில் பாதுகாப்பு நிறைந்த சிறைச்சாலை ஒன்றில் நேற்று முன்தினம் போதை மருந்து கடத்தல் குற்றத்திற்காக கைது செய்யப்பட்டு அடைக்கப்பட்டு இருக்கும் இரு குழுவினருக்கு இடையே சிறைச்சாலையின் சமையல் கூடப்பகுதியில் பயங்கர மோதல் ஏற்பட்டது. அப்போது இரு தரப்பினரும் துப்பாக்கி சூட்டில் ஈடுபட்டனர். இதேபோல் கூர்மையான ஆயுதங்களாலும் பயங்கரமாக தாக்கிக் கொண்டனர். இதில் சம்பவ இடத்திலேயே 28 கைதிகள் உயிர் இழந்தனர். பலர் படுகாயம் அடைந்தனர். மெக்சிகோ நாட்டின் பிரபல போதை மருந்து கடத்தல் தலைவன் ஜாக்கியூன் எல்சாபோ கஷ்மான், கடந்த ஜனவரி மாதம் அமெரிக்காவுக்கு நாடு கடத்தப் பட்டார். இதனால் அடுத்து போதை மருந்து கடத்தல் கும்பலுக்கு யார் தலைமை ஏற்பது என்ற தொழில் போட்டியில் சிறைக்குள் இரு பிரிவினருக்கு இடையே இந்த மோதல் ஏற்பட்டு உள்ளதாக அகாபுல்கோ சிறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
நேற்று முன்தினம் ராணி எலிசபெத்தின் உடல் அங்குள்ள செயிண்ட் கில்ஸ்
மேலும்இங்கிலாந்தின் ராணியாக சுமார் 70 ஆண்டு காலம் ஆட்சி புரிந்த, இரண்டாவது
மேலும்வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்
மேலும்இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை
மேலும்16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை
மேலும்