கடல்தொழில் சட்ட திருத்த மசோதாவை தாக்கல் செய்து பேசிய இலங்கை மீன்வளத்துறை அமைச்சர், 'எல்லை தாண்டினால் கைது நடவடிக்கை தொட ரும்' என்று இலங்கை நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். கடற்தொழில் சட்டத்தில் இலங்கை அரசு திருத்தம் கொண்டுவரும் மசோதாவை நேற்று தாக்கல் செய்தது. தடை செய்யப்பட்ட வலைகளைப் பயன் படுத்துதல், எல்லை தாண்டி மீன் பிடித்தல் போன்ற செயல்களுக்கு ரூபாய் 2 கோடி முதல் 20 கோடி வரை அபராதம் விதிக்கும் வகையில் மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதாவை தாக்கல் செய்து பேசிய இலங்கையின் மீன்வளத் துறை அமைச்சர் மஹிந்த அமரவீர, "இலங்கை அரசின் நடவடிக்கைகளால் எல்லை தாண்டி மீன் பிடிப்பவர்களின் எண்ணிக்கை பாதியாக குறைந்துள்ளது. இனியும் இது தொடர்ந்தால் கைது நடவடிக்கை தொடரும். இலங்கைக் கடற் படையால் சிறைப்பிடிக்கப்பட்டுள்ள 42 படகுகளை இதுவரை விடுவிக்கவில்லை. இந்த படகுகளை விடுவிக்க இலங்கை மீனவர்கள் இணக்கம் தெரிவித் துள்ள போதிலும், இலங்கை அரசின் நிபந்தனைகளை இந்திய அரசு ஏற்றுகொள்ளும் வரை விடுவிக்கப் போவதில்லை" என்று கூறிவுள்ளார்.
இலங்கையில் பொருளாதார நெருக்கடியில் இருந்து மக்களை மீட்க முடியாத
மேலும்அங்கஜன் இராமநாதன் கோரிக்கை
மேலும்ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சார்பில் முன்னாள் அதிபர் மைத்திரிபால
மேலும்அதிபர் கோத்தபாய அரசாங்கம் சிங்கள பௌத்த மக்களுக்காகவும் தமிழ், முஸ்லிம்
மேலும்