அரபு நாடுகளின் நிபந்தனைகளை கத்தார் அரசு ஏற்றுக் கொள்ளாததைத் தொடர்ந்து அந்நாடுகள் கத்தார் அரசை எச்சரித்து அறிக்கை ஒன்றை வெளியிட் டுள்ளன. கத்தார் அரசாங்கம் தீவிரவாதத்துக்கு துணை போவதாகவும், தீவிரவாத செயல்களுக்கு நிதி உதவி அளித்து வருவதாகவும் அரபு நாடுகள் குற்றம்சாட்டின. சவுதி, பஹ்ரைன், ஐக்கிய அரபு எமிரேட், எகிப்து உள்ளிட்ட வளைகுடா நாடுகள் கத்தார் உடனான அனைத்து தூதரக உறவுகளையும் முறித்துக் கொண் டன. கத்தார் மீதான தடையை திரும்பப் பெற 13 நிபந்தனைகளை அரபு நாடுகள் முன் வைத்துள்ளன. ஆனால், கத்தார் அரசோ தன்மீது வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை மறுத்து வருகிறது. இந்நிலையில், 13 நிபந்தனைகளை கத்தார் ஏற்றுக்கொள்ள அரபு நாடுகள் விதித்த கெடு முடிந்துவிட்டது. கத்தார் மற்றும் அதற்கு எதிரான பிற அரபு நாடு களுக்கும் இடையே சமரசம் செய்ய குவைத் மேற்கொண்டு வரும் முயற்சியும் தோல்வியடைந்துவிட்டது. ‘பிற நாடுகள் அதிகாரம் செய்ய கத்தார் சாதா ரண நாடு கிடையாது. நாங்கள் எதற்கும் தயாராக இருக்கிறோம். எந்த நிபந்தனையையும் ஏற்றுக்கொள்ள முடியாது’ என்று கத்தார் பாதுகாப்புத் துறை அமைச்சர் திட்டவட்டமாகத் தெரிவித்துவிட்டார். இந்நிலையில், சவுதி அரேபியா, பஹ்ரைன், ஐக்கிய அரபு எமிரேட், எகிப்து ஆகிய நான்கு நாடுகள் இணைந்து கூட்டு அறிக்கை ஒன்றை வெளி யிட் டுள்ளன. அதில் ‘கத்தார் 13 நிபந்தனைகளை ஏற்க மறுத்துவிட்டது. தீவிரவாதிகளுடன் கத்தாருக்கு தொடர்பு இருக்கிறது என்பதற்கு இதுதான் எடுத்து காட்டு. கத்தாருக்கு எதிராக புதிய நடவடிக்கைகள் எடுக்கப்படும். அரசியல், பொருளாதாரம் சட்டரீதியான நடவடிக்கை எடுப்போம். நாங்கள் எடுக்கும் நட வடிக்கை கத்தார் மக்களை பாதிக்காது. ஆனால், கத்தார் அரசைத் தாக்கும்’ என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
நேற்று முன்தினம் ராணி எலிசபெத்தின் உடல் அங்குள்ள செயிண்ட் கில்ஸ்
மேலும்இங்கிலாந்தின் ராணியாக சுமார் 70 ஆண்டு காலம் ஆட்சி புரிந்த, இரண்டாவது
மேலும்வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்
மேலும்இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை
மேலும்16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை
மேலும்