ஜேர்மனியில் நடைபெற்று வரும் G-20 மாநாட்டிற்கு எதிராக மக்கள் கடுமையான எதிர்ப்பை வௌியிட்டதோடு கலவரத்திலும் ஈடுபட்டனர். இதன்போது 76 பொலிஸ் அதிகாரிகள் காயம் அடைந்தமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜேர்மனியில் உள்ள Hamburg நகரில் நேற்று மாநாடு தொடங்கியுள்ளது. மாநாட்டிற்கு எதிராக போராட்டம் நிகழும் என எதிர்பார்க்கப்பட்டதால் 20,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். எனினும், மாநாடு தொடங்குவதற்கு முன்னதாக சுமார் 12,000 பேர் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டக்கார்களை ஒடுக்க பொலிசார் ஈடுப்பட்டபோது இருதரப்பினருக்கு இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டு அடிதடி ஏற்பட்டுள்ளது. போலீசாரை நோக்கி போராட்டக்காரர்கள் கற்கள் மற்றும் கண்ணாடி பாட்டில்களை வீசியுள்ளனர். போலீசாரின் வாகனங்களும் தீயிட்டு எரிக்கப்பட்டன. மாநாட்டின் மூலம் உலகமயமாக்குதலை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோஷம் எழுப்பினர். போராட்டக்காரர்களை இரண்டு பிரிவுகளாக பிரித்ததால் கலவரத்தை ஓரளவு கட்டுக்குள் வந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். இத்தாக்குதலை தொடர்ந்து பலர் கைது செய்யப்பட்னர். இன்றும் நாளையும் நடைபெற உள்ள மாநாட்டில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின், சீனா ஜனாதிபதி ஸீ ஜின்பிங், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பங்கேற்க உள்ளது குறிப்பிடத்தக்கது.
நேற்று முன்தினம் ராணி எலிசபெத்தின் உடல் அங்குள்ள செயிண்ட் கில்ஸ்
மேலும்இங்கிலாந்தின் ராணியாக சுமார் 70 ஆண்டு காலம் ஆட்சி புரிந்த, இரண்டாவது
மேலும்வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்
மேலும்இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை
மேலும்16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை
மேலும்