img
img

வட கொரியாவுடனான வர்த்தகத்தை நிறுத்த வேண்டும்..! சீனாவை எச்சரிக்கும் அமெரிக்கா
வியாழன் 06 ஜூலை 2017 17:25:49

img

வட கொரியாவுடன் வர்த்தகம் செய்வதை சீனா நிறுத்த வேண்டும்' என்று ஐநா-வுக்கான அமெரிக்கத் தூதர் நிக்கி ஹேலி தெரிவித்துள்ளார். வட கொரியா, கடந்த சில தினங்களுக்கு முன்னர் கண்டம் விட்டு கண்டம் பாயும் சோதனையை மீண்டும் மேற்கொண்டது. வட கொரியாவின் இந்தச் செய லுக்கு, அமெரிக்கா உட்பட உலக நாடுகள் பலவும் கண்டனம் தெரிவித்தன. இதுகுறித்து, ஐநா-வுக்கான அமெரிக்கத் தூதர் நிக்கி ஹேலி, 'வட கொரியாவின் ஏவுகணைச் சோதனை, ராணுவ விரிவாக்கத்துக்கான செயல். வட கொரியா மீது ராணுவ நடவடிக்கை எடுப்பது குறித்த திட்டம் இன்னும் நடைமுறையில் தான் உள்ளது. வட கொரியாவுடன் ஏதேனும் வர்த்தகம் செய்வதை ஊக்குவிப்பது, ஐநா-வின் பாதுகாப்புத் தீர்மானத்தை மீறுவதாகும். அதில், சில நாடுகள் அமெரிக்கா வுடனும் வர்த்தகம் செய்வதற்கு விரும்புகின்றன. ஆனால், அது நடக்காது. வட கொரியா, தனக்கான 90 சதவிகித வணிகத்தை சீனாவுடன் மேற்கொள் கிறது. சீனா அதை நிறுத்த வேண்டும்' என்று தெரிவித்தார்.

பின்செல்

உலகச் செய்திகள்

img
ராணி எலிசபெத் உடலுக்கு அஞ்சலி செலுத்த நாள் கணக்கில் காத்துக்கிடக்கும் மக்கள்

நேற்று முன்தினம் ராணி எலிசபெத்தின் உடல் அங்குள்ள செயிண்ட் கில்ஸ்

மேலும்
img
ராணி எலிசபெத் மறைவு ஒரு சகாப்தத்தின் முடிவு

இங்கிலாந்தின் ராணியாக சுமார் 70 ஆண்டு காலம் ஆட்சி புரிந்த, இரண்டாவது

மேலும்
img
வெவ்வேறு ஆண்டுகளில் வெவ்வேறு தசாப்தங்களில் பிறந்த இரட்டையர்கள்

வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்

மேலும்
img
பத்திகையாளர் ஜமால் கசோகி கொலை வழக்கில் 5 பேருக்கு தூக்குத் தண்டனை

இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை

மேலும்
img
16 ஆயிரம் வீரர்களுடன் அமெரிக்காவில் விண்வெளி படை

16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img