பிரான்ஸ் அதிபரைப் படுகொலைசெய்ய சதித்திட்டம் தீட்டியதாக,வாலிபர் ஒருவரை போலீஸார் கைதுசெய்துள்ளனர். பிரான்ஸ் நாட்டில், ஒவ்வோர் ஆண்டும் ஜூலை 14-ம் தேதி ‘தேசிய தினம்’ கொண்டாடப்படுகிறது. இதன் ஒரு பகுதியாகத் தலைநகர் பாரீஸில், சேம்ஸ்-எலைசீஸ் வீதியில் ராணுவ அணிவகுப்பு நடத்தப்படுவது வழக்கம். இந்நிலையில், தேசிய தினக் கொண்டாட்டத்தின் ராணுவ அணிவகுப்பின்போது அந்த நாட்டு அதிபர் இமானுவல் மெக்ரானைப் படுகொலை செய்ய சதித்திட்டம் தீட்டியதாக, வாலிபர் ஒருவரை போலீஸார் கைதுசெய்துள்ளனர். அந்த வாலிபர், பாரீஸின் புறநகர்ப் பகுதியான ஆர்ஜென்தெய் நகரைச் சேர்ந்தவர் என்பதைத் தவிர, வேறு எந்தத் தகவலையும் போலீஸார் வெளியிட வில்லை. அவர், அதிபரைக் கொலைசெய்ய என்ன சதித்திட்டம் தீட்டினார்? அவர், எப்படி போலீஸிடம் சிக்கினார் என்ற தகவல்களுக்கும் பதில் இல்லை. ஆனாலும், அவர் மீது பயங்கரவாதக் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.
நேற்று முன்தினம் ராணி எலிசபெத்தின் உடல் அங்குள்ள செயிண்ட் கில்ஸ்
மேலும்இங்கிலாந்தின் ராணியாக சுமார் 70 ஆண்டு காலம் ஆட்சி புரிந்த, இரண்டாவது
மேலும்வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்
மேலும்இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை
மேலும்16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை
மேலும்