வட கொரியாவின் மேற்குப் பகுதியான பாங்கியானிலிருந்து புதிய ஏவுகணைச் சோதனையை அந்நாட்டு அரசு, சில நாள்களுக்கு முன்னர் நடத்தியது. அந்த ஏவுகணை, கண்டம் விட்டு கண்டம் பாயக்கூடிய திறன் படைத்தது என்று யூகிக்கப்படுகிறது. 'இது, அமெரிக்காவை அச்சுறுத்துவதற்காக எடுக்கப்பட்ட நட வடிக்கை' என்று கூறப்படுகிறது. இதற்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், 'வட கொரியா மீண்டும் ஓர் ஏவுகணைச் சோதனையை நடத்தியுள்ளது. வட கொரிய அதிபருக்கு வாழ்க் கையில் வேறு எதுவும் வேலையே இல்லையா. தென் கொரியாவும் ஜப்பானும் இந்தத் தொடர் ஏவுகணைச் சோதனையைப் பொறுத்துக்கொள்வது ஆச்சர் யமாக உள்ளது. சீனா, இந்தச் சம்பவம்குறித்து வட கொரியா மீது மிகவும் கடுமையான நடவடிக்கை எடுத்து, இந்த மதிகெட்ட வேலைக்கு முடிவு கட்டுமா என்று பார்க்கலாம்' எனத் தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதையடுத்து, சீன அதிபர் ஜின்பிங் மற்றும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் ஆகியோர் மாஸ்கோவில் சந்தித்து இந்தப் பிரச்னைகுறித்து ஆலோசனை நடத் தினர். பின்னர், இரு நாடுகளும் கூட்டாக ஒரு அறிக்கையை வெளியிட்டன. அதில், 'வட கொரியா நடத்திவரும் அணு ஆயுதச் சோதனைகள் மற்றும் இதர ஏவுகணைச் சோதனைகளை உடனடியாக நிறுத்திக்கொள்ள வேண்டும். அதே நேரத்தில், அமெரிக்கா - தென் கொரியா இணைந்து கூட்டாக மேற்கொள்ளும் ராணுவப் பயிற்சிகளையும் இதற்குமேல் பண்ணக்கூடாது' என்று குறிப்பிட்டுள்ளன.
நேற்று முன்தினம் ராணி எலிசபெத்தின் உடல் அங்குள்ள செயிண்ட் கில்ஸ்
மேலும்இங்கிலாந்தின் ராணியாக சுமார் 70 ஆண்டு காலம் ஆட்சி புரிந்த, இரண்டாவது
மேலும்வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்
மேலும்இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை
மேலும்16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை
மேலும்