img
img

விமானத்தில் தனியொருவராக உலகை வலம் வரும் முதல் பெண்மணி
செவ்வாய் 04 ஜூலை 2017 16:00:23

img

கெய்ரோ, விமானத்தில் தனியொரு நபராக உலகை வலம் வரும் முதலாவது இளம் பெண் விமானியாக ஆப்கானிஸ்தானில் பிறந்தவரான ஷாயிஸ்தா வையிஸ் திகழ்கிறார். 29 வயதான அந்தப் பெண் 18 நாடுகளுக்கும் மேலாக உலகை சுற்றி வருகிறார். 25,800 கிலோ மீட்டர் தூரத்தை கடந்து, வரும் ஆகஸ்ட் மாதம் அமெரிக்கா, புளோரிடாவில் தனது பயணத்தை முடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எகிப்து தலைநகர் கெய்ரோவை வந்தடைந்துள்ள ஷாயிஸ்தா, விமானம் பராமரிப்பு தளத்தில் ( ஹாங்கர்) செய்தியாளர்களிடம் பேசினார். இவர் கடந்த மே மாதம் 13 ஆம் தேதி அமெரிக்கா புளோரிடாவிலிருந்து தனது பயணத்தை தொடங்கினார். ஸ்பெயின், எகிப்து, இந்தியா, சிங்கப்பூர், ஆஸ்திரேலியா, தாய்லாந்து ஆகிய நாடுகளை அவரது பயணம் உள்ளடக்கியுள்ளது. விமானத்தில் உலகை வலம் வரும் முதலாவது இளம் பெண் விமானி என்ற பெருமையை பெறுவதற்காக இவர் தனியொரு நபராக இந்த சாகசப் பய ணத்தை தொடங்கியுள்ளார். ஏ36 ரகத்திலோன பீச்சார்ட் போனான்ஸா என்ற விமானத்தை தனது உலகப்பயணத் திற்கு ஷாயிஸ்தா பயன்படுத்தி வருகிறார். இவர் 30 இடங்களில் விமானத்தை நிறுத்தவிருக்கிறார். ஆப்கானிஸ்தானில் சோவியத் படை போரில் ஈடுபட்டிருந்த காலகட்டத்தில் ஷாயிஸ்தா, ஆப்கானிஸ் தானில் 1987 இல் பிறந்தார். போரின் போது அவரின் குடும்பத்தினர் அகதிகளாக அமெரிக்காவில் குடியேறினர். சிறு வயது முதல் விமானத்தை ஓட்ட மிகுந்த ஆர்வம் கொண்டவராக இவர் திகழ்ந்துள்ளார். வர்த்தக வான் போக்கு வரத்து துறையில் ஒரு விமானியாக லைசென்ஸ் பெற்றவரான ஷாயிஸ்தா, விமானத்துறையில் பட்டம் பெற்றவராகவும் திகழ்கிறார். விமானிகளில் 5 விழுக்காட்டினர் மட்டுமே பெண்களாக இருக்கின்றனர். அதில் ஒருவராக இவர் திகழ்கிறார்.

பின்செல்

உலகச் செய்திகள்

img
ராணி எலிசபெத் உடலுக்கு அஞ்சலி செலுத்த நாள் கணக்கில் காத்துக்கிடக்கும் மக்கள்

நேற்று முன்தினம் ராணி எலிசபெத்தின் உடல் அங்குள்ள செயிண்ட் கில்ஸ்

மேலும்
img
ராணி எலிசபெத் மறைவு ஒரு சகாப்தத்தின் முடிவு

இங்கிலாந்தின் ராணியாக சுமார் 70 ஆண்டு காலம் ஆட்சி புரிந்த, இரண்டாவது

மேலும்
img
வெவ்வேறு ஆண்டுகளில் வெவ்வேறு தசாப்தங்களில் பிறந்த இரட்டையர்கள்

வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்

மேலும்
img
பத்திகையாளர் ஜமால் கசோகி கொலை வழக்கில் 5 பேருக்கு தூக்குத் தண்டனை

இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை

மேலும்
img
16 ஆயிரம் வீரர்களுடன் அமெரிக்காவில் விண்வெளி படை

16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img