லண்டன் ஜெர்மன் சர்வாதிகாரி என வருணிக்கப்படும் அடால்ஃப் ஹிட்லர் தீட்டிய ஓவியங்கள் பிரிட்டனில் ஏலத்துக்கு வரவுள்ளன. இதுகுறித்து பிரிட்டனில் உள்ள மல்லாக்ஸ் ஏல மையத்தின் ஆலோசகர் பென் ஜோன்ஸ் தெரிவித்துள்ளதாவது, ஹிட்லர் தீட்டிய 4 ஓவியங்கள் விற்பனைக்கு வந்துள்ளன. அவர் வரைந்த அந்த 4 ஓவியங்களிலும் ஏ.ஹிட்லர் என்ற அவரின் கையெழுத்து இடம்பெற்றுள்ளது. அது தவிர, 1900-ம் ஆண்டுக்கு முன்பாக ஹிட்லர் வரைந்த மேலும் 2 ஓவியங்களும் ஏலத்துக்கு வரவுள்ளன. ஆனால், அந்த 2 ஓவியங்களிலும் அவரின் கையெழுத்து இடம்பெறவில்லை. ஏலம் விடப் படவுள்ள ஒவ்வொரு ஓவியமும் 5,000 பவுண்டுகள்(இந்திய மதிப்பில் சுமார் ரூ.4.25 லட்சம்) முதல் 7,000 பவுண்டுகள்(ரூ.6 லட்சம்) வரை விலை போகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. ஹிட்லரின் ஓவியங்களை நாங்கள் ஏற்கெனவே 600 பவுண்டுகள்(ரூ.51,000) முதல் 1,200 பவுண்டுகள்(ரூ.1.02 லட்சம்) வரையிலான விலைக்கு ஏலத்தில் விற்பனை செய்துள்ளோம் என்று கூறியுள்ளார். மேலும், ஜூலை 6-ம் தேதி ஹிட்லரின் ஓவியங்கள் ஏலத்துக்கு வரவுள்ளன என்றும் ஜோன்ஸ் தெரிவித்துள்ளார். அதில், ஒரு கிராமத்தின் தெரு, ஆல்ப்ஸ் மலைப்பகுதியில் வளரும் மலர் செடி, ஹிட்லர் பிறந்த நாடான ஆஸ்திரியாவின் டர்ன்ஸ்டீன் நகர நுழைவு வாயில் தோற்றம் உள்ளிட்டவை ஏலத்துக்கு வர உள்ள ஓவியங்களில் குறிப்பிடத்தக்கவை ஆகும். ஹிட்லர் அவரது வாழ்நாளில் வாட்டர் கலர் மற்றும் ஆயில் பெயிண்டிங் முறையில் 2,000 முதல் 3,000 வரையிலான ஓவியங்களைப் படைத்திருப்பார் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
நேற்று முன்தினம் ராணி எலிசபெத்தின் உடல் அங்குள்ள செயிண்ட் கில்ஸ்
மேலும்இங்கிலாந்தின் ராணியாக சுமார் 70 ஆண்டு காலம் ஆட்சி புரிந்த, இரண்டாவது
மேலும்வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்
மேலும்இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை
மேலும்16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை
மேலும்