img
img

பிரச்சனையை சரியாக கையாளவில்லை என்றால் போர்தான் சீன கண்காணிப்பாளர்கள்
திங்கள் 03 ஜூலை 2017 14:10:57

img

பெய்ஜிங், சிக்கிம் மாநிலத்தில் இந்தியா–பூடான்–சீனா எல்லை அருகே டோகா லா பகுதியில் உள்ள லால்டன் என்ற இடத்தில், கடந்த 2012–ம் ஆண்டு இந்திய ராணுவம் இரண்டு பதுங்கு குழிகளை அமைத்து இருந்தது. இந்நிலையில், கடந்த மாதம் 1–ந் தேதி அங்கு வந்த சீன ராணுவத்தினர், அந்த பதுங்கு குழிகளை அகற்றுமாறு கூறினர். அதுபற்றி தங்கள் படைப்பிரிவு தலைமையகத்துக்கு இந்திய ராணுவத்தினர் தகவல் தெரிவித்தனர். அதற்குள், கடந்த மாதம் 6–ந் தேதி இரவு, புல்டோசர்கள் உதவியுடன் 2 பதுங்கு குழிகளையும் சீன ராணுவத்தினர் அழித்தனர். அங்கிருந்த இந்திய ராணுவத்தினர், அவர்கள் மேற்கொண்டு சேதம் விளைவிப்பதையும், ஊடுருவுவதையும் தடுத்து நிறுத்தினர். மேலும், இந்திய ராணு வத்தினர் அப்பகுதியில் கூடுதலாக குவிக்கப்பட்டனர். அதுபோல், சீன படையினரும் அதிக அளவில் வரவழைக்கப்பட்டனர். கடந்த மாதம் 8–ந் தேதி, இருதரப்புக்கும் இடையே கைகலப்பும் ஏற்பட்டது. இதனால் இதுபற்றி விவாதிக்க கொடி கூட்டத்துக்கு இந்தியா அழைப்பு விடுத்தது. 2 அழைப்புகளை நிராகரித்த சீனா, 3–வது அழைப்பை ஏற்று, கூட்டத்தில் பங்கேற்றது. லால்டன் பகுதியில் இருந்து இந்திய படைகளை திரும்பப்பெறுமாறு, கூட்டத்தில் சீன ராணுவம் தெரிவித்தது. அதை இந்திய ராணுவம் ஏற்க மறுத்து விட்டது.இதனால் ஆத்திரம் அடைந்த சீனா, தனது ஆளுகைக்கு உட்பட்ட திபெத்தில் உள்ள மானசரோவருக்கு இந்திய யாத்ரீகர்கள் செல்வதற்கு அனுமதி மறுத்தது. மேலும், படைகளை திரும்பப்பெற இந்தியாவுக்கு தூதரக ரீதியாகவும் அழுத்தம் கொடுத்து வருகிறது. சரித்திரத்தில் இருந்து இந்தியா பாடம் கற்க வேண்டும் என்று சீன ராணுவ செய்தித்தொடர்பாளர் வு ஜியான் எச்சரிக்கை விடுத்தார். அதற்கு இந்திய ராணுவ மந்திரி அருண் ஜெட்லி, ‘1962–ம் ஆண்டு இருந்த இந்தியா வேறு, தற்போது இருக்கும் இந்தியா வேறு’ என்று பதிலடி கொடுத்தார். இதுபோன்று கடந்த ஒரு மாத காலமாக இந்தியா–சீன ராணுவத்தினர் இடையே சிக்கிம் மாநில பகுதியில் மோதல் போக்கு நீடித்து வருகிறது. ஆகவே, எதையும் சந்திக்கும் வகையில், அங்கு இந்திய படைகள் குவிக்கப்பட்டு வருகின்றன. அதே சமயத்தில், மோதல் போக்கை வெளிக்காட்டாதவாறு, துப் பாக்கி முனைகள் தலைகீழாக வைக்கப்பட்டுள்ளதாக இந்திய ராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன. இந்நிலையில் சிக்கிம் எல்லையில் எழுந்து உள்ள பிரச் சனையை சரியாக கையாளவில்லை என்றால் போர் ஏற்பட வாய்ப்பு உள்ளது என சீன கண்காணிப்பாளர்கள் தெரிவித்து உள்ளனர். சர்வதேச ஆய்வுகளுக்கான ஷாங்காய் மாநகர மைய பேராசிரியர் வாங் தேஹுவா பேசுகையில், சீனாவும் 1962-ம் ஆண்டில் இருந்த நிலையைவிட இப்போது மாறுபட்டு உள்ளது,” என கூறிஉள்ளார். “இந்தியா 1962-ம் ஆண்டில் இருந்து சீனாவை ஒரு மிகப்பெரிய எதிராளியாக நடத்தி வருகிறது, இருநாடுகளும் ஒற்றுமைகளை பகிர்ந்து உள்ளது. இருநாடுகளும் இப்போது அதிகமான மக்கள் தொகையை கொண்டு உள்ளது,” என வாங் கூறிஉள்ளார். சீனாவின் அரசு பத்திரிக்கையான குளோபல் டைம்ஸ், “இந்தியா மற்றும் சீனா இடையே எழுந்து உள்ள பிரச்சனையை சரியாக கையாளவில்லை என் றால் போருக்கான வாய்ப்பு உள்ளது என கண்காணிப்பாளர்கள் தெரிவித்து உள்ளனர், சீனா அதனுடையை இறையாண்மை மற்றும் எல்லையை பாது காக்கும்,” என கூறிஉள்ளது.

பின்செல்

உலகச் செய்திகள்

img
ஊசி மூலம் தனது உடல் தசையை கிட்டத்தட்ட 2 அடி உயரத்திற்கு உயர்த்திய ஆணழகன்

ஊசி மூலம் தனது மேல் கை தசையை கிட்டத்தட்ட

மேலும்
img
ஆப்கானில் ராணுவ அகாடமியில் குண்டு வெடிப்பு- 6 பேர் உயிரிழப்பு

தலிபான் பயங்கரவாதிகளுடன் அமைதிக்கான

மேலும்
img
அதிபர் முஷாரப் மருத்துவமனையில் அனுமதி 

பாகிஸ்தானின் முன்னாள் ராணுவ ஆட்சியாளர்

மேலும்
img
245 கிராம் எடையுடன் பிறந்த குழந்தை உடல் நலம் தேறியது 

அறுவை சிகிச்சை மூலம் கர்ப்பிணி வயிற்றில்

மேலும்
img
வர்த்தகப் போர் எதிரொலி! அமெரிக்கா செல்லும் சீன பயணிகளின் எண்ணிக்கை சரிவு

கடந்த 2003ஆம் ஆண்டுக்கு பிறகு முதன்முறையாக

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img