img
img

பெர்முடா முக்கோணத்தின் மத்தியில் திடீரென உருவான ஆபத்தான தீவு
திங்கள் 03 ஜூலை 2017 14:05:27

img

பெர்முடா முக்கோணத்தின் மத்தியில் தற்போது ஆபத்தான தீவு ஒன்று உருவாகியுள்ளது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரி வித்துள்ளனர். பெர்முடா முக்கோணம் என்று கேள்விப்பட்டிருக்கிறீர்களா? இன்றைய நவீன அறிவியலால் கூட இன்னதென்று கூறமுடியாத மர்மங்களும், வியப்புகளும் அதிர்ச்சியும் நிறைந்த இடம் தான் பெர்முடா முக்கோணம். இது "சாத்தானின் முக்கோணம்' என்றும் அழைக்கப்படுகிறது. பேரன்ஸ் கடல் பகுதியில் புளோரிடா நீரிணைப்பு, பகாமாஸ் மற்றும் மொத்த கரீபியன் தீவுகளையும் உள்ளடக்கிய அட்லாண்டிக்கின் கிழக்கிலிருந்து அசோர்ஸ் வரை ஒரு முக்கோணமாக அமைந்துள்ளது இது. இந்த பகுதியில் ஏராளமான விமானங்களும், கப்பல்களும் பெர்முடா முக்கோணப்பகுதியில் மிகவும் மர்மமான முறையில் மறைந்திருக்கின்றன. ஆயி னும், இதற்கெல்லாம் அடிப்படையான காரணம் என்னவென்று உறுதியாக கண்டுபிடிக்க முடியவில்லை.கரீபியன் தீவை சேர்ந்த மக்களும்,முக்கோணப் பகுதியில் நிகழும் மர்ம சம்பவங்கள் அனைத்திற்கும் மனிதனுக்கு அப்பாற்பட்ட மாயச் சக்திகளே காரணம் என்று முழுமையாக நம்பினார்கள். பெர்முடா முக்கோணம் குறித்த திடுக்கிட வைக்கும் சுவாரஸ்யத் தகவல்கள் அவ்வப்போது வெளிவந்த வண்ணம் உள்ளன.கடலில் 440,000 மைல்கள் பரப்பளவைக் கொண்ட பெர்முடா முக்கோணத்தின் மத்தியில் சமீபத்தில் சிறிய தீவு ஒன்று உருவாகியுள்ளது.சிறிய மணல் திட்டு போன்று இருந்த இது, நாட்கள் செல்ல செல்ல பெரிதாகி ஒரு தீவு போன்று மாறியுள்ளது, இது பார்ப்பதற்கு பிறை வடிவில் உள்ளது. இந்த தீவிற்கு ஷெல்லி என்று பெயரிடப்பட்டுள்ளது, இந்த புதிய தீவு ஒரு மைல் நீளமும், 400 அடி அகலமும் கொண்டது.சங்கு சேகரிப்பாளர்கள் மற்றும் புகைப்படக்காரர்கள் இந்த தீவுக்கு செல்வதில் கவனத்தில் கொள்ள வேண்டும்.மேலும் பெரிய அளவிலான திமிங்கலங்களின் ஆதிக்கம் இருப்பதால் உள்ளூர்வாசிகள் கடலுக்கு செல்வதை தவிர்க்கவேண்டும். ஏற்கனவே ஆபத்தான நிலையில் இருக்கும் இந்த பெர்முடா முக்கோணத்தின் மத்தியில் சிறிய தீவு வேறு உருவாகியிருப்பதால் எச்சரிக்கையோடு இருக்க வேண்டும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

பின்செல்

உலகச் செய்திகள்

img
ராணி எலிசபெத் உடலுக்கு அஞ்சலி செலுத்த நாள் கணக்கில் காத்துக்கிடக்கும் மக்கள்

நேற்று முன்தினம் ராணி எலிசபெத்தின் உடல் அங்குள்ள செயிண்ட் கில்ஸ்

மேலும்
img
ராணி எலிசபெத் மறைவு ஒரு சகாப்தத்தின் முடிவு

இங்கிலாந்தின் ராணியாக சுமார் 70 ஆண்டு காலம் ஆட்சி புரிந்த, இரண்டாவது

மேலும்
img
வெவ்வேறு ஆண்டுகளில் வெவ்வேறு தசாப்தங்களில் பிறந்த இரட்டையர்கள்

வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்

மேலும்
img
பத்திகையாளர் ஜமால் கசோகி கொலை வழக்கில் 5 பேருக்கு தூக்குத் தண்டனை

இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை

மேலும்
img
16 ஆயிரம் வீரர்களுடன் அமெரிக்காவில் விண்வெளி படை

16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img