அயர்லாந்தின் பிரதமராக லியோ வார்தாகர் தேர்வாகியுள்ளார். லியோவுக்கு வாழ்த்து தெரிவித்து போனில் பேசினார் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப். அப்போது அவரது அறையில் அயர்லாந்தைச் சேர்ந்த செய்தியாளர்கள் சிலரும் இருந்தனர். அகதிகளின் புலப்பெயர்வு, பிரெக்ஸிட் போன்ற முக்கியமான பிரச்னைகள் குறித்து அவர் ஐரிஷ் அதிபருடன் பேசுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. அப்போது அவர்களுக்கான பார்வை நேரம் முடிந்து அயர்லாந்து செய்தியாளர்கள் புறப்பட்டனர். மறுமுனையில் அயர்லாந்தின் பிரதமரை வைத்துக் கொண்டே விரல் சொடுக்கி பெண் செய்தியாளர் கேட்டரினா பெரியை அழைத்த ட்ரம்ப் அவரின் பெயரை கேட்டார். 'உங்கள் நாட்டின் அழகான செய்தி யாளர் என் முன்னால் உள்ளார்', என்ற அவர் பெரியை பார்த்து 'இவரின் சிரிப்பு மிக அழகாக உள்ளது . இவர் உங்களை நன்றாகப் பார்த்துக்கொள்வார்', என்று ஐரிஷ் பிரதமரிடம் ட்ரம்ப் தெரிவித்தார். இது குறித்து டிவிட்டரில் எழுதியுள்ள செய்தியாளர் கேட்டரினா பெரி, 'அது ஒரு அபத்தமான சூழல்', என்று தெரிவித்துள்ளார். அவரிடம் அமெரிக்க பெண் பத்திரிகையாளர்கள் சிலர் தங்கள் அதிபரின் செயலுக்காக மன்னிப்புக்கேட்டுள்ளனர்.
நேற்று முன்தினம் ராணி எலிசபெத்தின் உடல் அங்குள்ள செயிண்ட் கில்ஸ்
மேலும்இங்கிலாந்தின் ராணியாக சுமார் 70 ஆண்டு காலம் ஆட்சி புரிந்த, இரண்டாவது
மேலும்வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்
மேலும்இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை
மேலும்16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை
மேலும்