அமெரிக்காவின் இரவு விடுதி ஒன்றில் மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 28 பேர் படுகாயமடைந்துள்ளனர். அமெரிக்காவின் ஆர்கன்சாஸ் நகரில் உள்ள க்ளப்பில் இந்த அசம்பாவிதம் நடந்துள்ளது. அங்குள்ள லிட்டில் ராக் பகுதியில் அதிகாலை 2.30 மணிக்கு க்ளப்புக்குள் நுழைந்த மர்ம நபர்கள், தாங்கள் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தினர். வார இறுதி நாள் என்பதால், அங்கு ஏராளமானோர் வந்திருந்தனர். இந்த தாக்குதலில், 16 வயது சிறுவன் உட்பட மொத்தம் 28 பேர் படுகாயமடைந்தனர். அவர்கள் அனைவரும் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். பயங்கரவாத அமைப்பினர் யாருக்கும் இந்த சம்பவத்தில் தொடர்பு உள்ளதா என்பது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வரு கின்றனர்.
நேற்று முன்தினம் ராணி எலிசபெத்தின் உடல் அங்குள்ள செயிண்ட் கில்ஸ்
மேலும்இங்கிலாந்தின் ராணியாக சுமார் 70 ஆண்டு காலம் ஆட்சி புரிந்த, இரண்டாவது
மேலும்வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்
மேலும்இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை
மேலும்16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை
மேலும்