ஜப்பானில் பொம்மைகளை திருமணம் செய்து வாழும் கலாச்சாரம் தற்போது பெருகி வருகிறது. தங்களின் எண்ணங்களுக்கும், விருப்பு வெறுப்புகளுக்கு அமையவும் ஒரு சிறந்த வாழ்க்கைத் துணையை அமைத்துக் கொள்வதில் பெரும் சிரமத்தை எதிர்கொள்ளும் பெரும்பாலான பல ஆண்கள் இவ்வாறு பொம்மைத் திருமணம் செய்து வாழ்ந்து வருகின்றனர். ஒருவகை சிலிக்கான் போன்ற உலோகம் கொண்டு செய்யப்பட்ட இத்தகைய பொம்மைகளுடன் வாழ்வது தங்கள் வாழ்க்கையில் உச்சகட்ட மகிழ்ச்சியை ஏற்படுத்துவதாக அவர்கள் கூறுகின்றனர். குடும்பத்தில் சண்டை சச்சரவு, வாக்குவாதங்கள் இல்லாத ஒரு அமைதியான வாழ்க்கைமுறை தங்களுக்கு பிடித்திருப்பதாக கூறும் ஜப்பானிய ஆண்கள் மனைவியாக உள்ள அந்த பொம்மைகளை மிக மிக அன்பாக அரவணைத்துக் கொள்வது, பொது இடங்களுக்கு அழைத்துச் செல்வது என நிஜ மணவாழ்க்கை வாழ்வது ஆச்சரியாமவே பார்க்கப்படுகிறது. எப்போதும் இன்முகத்துடன் இருக்கும் என் காதலியை நான் தினமும் வேலை முடிந்து வரும்போது பார்க்கும்போது பெரும் மகிழ்ச்சியை உணர்கிறேன், வேலைப் பழுக்களாள் வரும் மன அழுத்தம் மறைந்து விடுகிறது என்கிறார் ஒரு ஆண். தாழ்வு மனப்பான்மை, ஏமாற்றப்பட்டு விடுவோமோ என்ற பயம், வயது முதிர்வு இதுபோன்ற எந்த பிரச்சனைகளை பற்றியும் எங்களுக்கு கவலையில்லை என்கின்றனர் இவ்வாறு திருமணம் செய்து வாழ்கின்றவர்கள். தங்களுக்கு பிடித்தவாறு ஒன்றாக குளிப்பது, ஆடை அணிவிப்பது, அலங்காரம் செய்வது, தாம்பத்திய உறவை மேற்கொள்வது என எதற்கும் குறைவிலாத வகையில் தயார் செய்யப்பட்ட இந்த பொம்மைகளுடன் வாழும் ஆண்களின் தொகை அதிரடியாக அதிகரித்திருப்பதுதான் பெரும் ஆச்சரியமாகும். ஜப்பான் தவிர சீனா, தென்கொரியா போன்ற நாடுகளிலும் இத்தகைய கலாச்சாரம் தற்போது மேலோங்கியிருப்பதாக ஆய்வுகள் குறிப்பிடுகின்றன.
நேற்று முன்தினம் ராணி எலிசபெத்தின் உடல் அங்குள்ள செயிண்ட் கில்ஸ்
மேலும்இங்கிலாந்தின் ராணியாக சுமார் 70 ஆண்டு காலம் ஆட்சி புரிந்த, இரண்டாவது
மேலும்வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்
மேலும்இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை
மேலும்16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை
மேலும்