உயிரிழந்த தங்கள் குழந்தையின் சாம்பலை பெற்றோர் பொம்மைக்குள் வைத்திருந்த நிலையில், வீட்டினுள் புகுந்த போலீசார் சோதனையிடுவதாக கூறி பொம்மையை கிழித்து சாம்பலை கீழே கொட்டியுள்ளனர். பிரித்தானியாவின் Staffordshire கவுண்டியை சேர்ந்தவர் James, இவர் மனைவி Chelsea Wright (23). இவர்களின் ஆண் குழந்தை Nathan பிறந்த பத்து மாதத்தில் திடீர் உடல் நலக்குறைவு காரணமாக கடந்த 2014ல் உயிரிழந்தது. இதையடுத்து, குழந்தையின் சடலம் எரிக்கப்பட்ட சாம்பலை நினைவாக Chelsea, கரடி பொம்மையின் உள்ளே இருக்கும் பையில் அடைத்து வைத்திருந்தார். வெளியில் எங்கு போனாலும் சாம்பல் இருக்கும் பொம்மையை உடன் எடுத்து செல்வார். இது தனது குழந்தை தன்னுடன் எப்போதும் இருப்பது போன்ற மன உணர்வை அவருக்கு கொடுத்துள்ளது. இந்நிலையில், James வீட்டுக்கு போலீசார் திடீரென வந்து சோதனையில் ஈடுபட்டுள்ளனர். Chelsea அவர்களிடம் வினவியபோது எங்களுக்கு ஒரு செய்தி வந்தது. அதுதான் வந்துள்ளோம் என்றனர். சோதனையின் போது குழந்தையின் சாம்பல் இருந்த பொம்மையை எடுத்து கிழித்ததில், சாம்பல் முழுவதும் கீழே கொட்டியுள்ளது. அதன் பின்னர் வீட்டில் பொலிசார் தேடி வந்த பொருள் கிடைக்காததால் அங்கிருந்து சென்றுள்ளனர். சாம்பல் அறை முழுவதும் சிதறி கிடந்தததை பார்த்த Chelsea அதிர்ச்சியில் உறைந்து போனார். அள்ள முயற்சித்தும் அது முழுவதுமாக முடியாமல் போனது. இப்படி இரக்கமற்ற முறையில் நடந்து கொண்ட பொலிஸ் அதிகாரிகள் மீது Chelsea குடும்பம் மனித உரிமைகள் மீறப்பட்டதாக கூறி சட்டப்படி வழக்கு தொடர்ந்துள்ளது. இது குறித்து Chelsea கூறுகையில், பொலிசார் பொம்மையில் தேடுவதற்கு முன்னரே அதில் சாம்பல் இருப்பதாக நான் கூறினேன். ஆனால் அதையும் மீறி அவர்கள் இரக்கமற்ற செயலை செய்தார்கள். தன்னுடைய குழந்தையின் இழப்பை கொஞ்சம் கொஞ்சமாக மறந்து வந்த நிலையில், பொலிசார் செய்த செயல் தங்கள் குழந்தையை மீண்டும் பறிகொடுத்த உணர்வை கொடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
நேற்று முன்தினம் ராணி எலிசபெத்தின் உடல் அங்குள்ள செயிண்ட் கில்ஸ்
மேலும்இங்கிலாந்தின் ராணியாக சுமார் 70 ஆண்டு காலம் ஆட்சி புரிந்த, இரண்டாவது
மேலும்வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்
மேலும்இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை
மேலும்16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை
மேலும்