கொழும்பு எல்லை தாண்டி மீன் பிடிக்கும் மீனவர்களுக்கு ரூ.2 கோடி முதல் ரூ.20 கோடி வரை அபராதம் விதிக்கப்படும் என்று இலங்கை மீன்வள துறை அமைச்சர் மகிந்த அமரவீர அறிவித்துள்ளார். இந்த அபராதம் குறித்த மசோதா நாடாளுமன்றத்தில் வருகிற ஜூலை மாதம் 6ம் தேதி தாக்கல் செய்யப்படுகிறது என்று மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார். தமிழக மீனவர்கள் இனி எல்லைத் தாண்டி மீன்பிடித்தால் ரூ.20 கோடி வரை அபராதம் விதிக்கப்படும் என்ற புதிய அறிவிப்பை இலங்கை அரசு வெளியிட்டுள்ளது. இது குறித்து வரும் 6ம் தேதி நாடாளுமன்றத்தில் மசோதா தாக்கல் செய்யப்படுவதாக இலங்கை மீன்வள துறை அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார். இலங்கையில் மீன்வள துறை அமைச்சர் மகிந்த அமரவீர பதவி ஏற்ற அடுத்த நிமிடத்திலிருந்தே தமிழக மீனவர்களுக்கு எதிராக அவ்வப்போது முன் னுக்குபின் முரணாக கருத்து வெளியிட்டுள்ளார். இதைப் போன்று தான் இன்றைய தினமும் ஒரு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அந்த கருத் தானது இலங்கை மீனவர்களுக்கு மகிழ்ச்சியும், இந்திய மீனவர்களுக்கு அதிர்ச்சியும் ஏற்படுத்தியுள்ளது. அதாவது எல்லைத் தாண்டி மீன் பிடிக்க வரும் தமிழக மீனவர்கள், குறிப்பாக வெளிநாட்டு மீனவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுடைய படகுகளை பறிமுதல் செய்வதோடு, மீனவர்களை வழக்கமாக கைது செய்து அடைத்து வைப்பதை தவிர்த்து முற்றிலும் மாறுபட்ட கருத்தாக ரூ.2 கோடி முதல் ரூ.20 கோடி வரை அபராதம் விதிக்கப்பட்டு விசைப்படகுகளை அரசுடைமை ஆக்கப்படும் என்ற கருத்தை வெளியிட்டுள்ளார். இந்த கருத்தானது தமிழக மீனவர்கள் இடையே பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. இதற்கு முன்பு இலங்கையில் உள்ள 143 விசைப்படகையும், 53 மீனவர்களையும் விடுதலை செய்ய வேண்டும் என மத்திய, மாநில அரசுகளுக்கு தமிழக மீனவர்கள் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வந்து பல அழுத்தங்களை தெரிவித்து வந்த இந்த நிலையிலும், தமிழக முதல்வர் எடப்பாடி பழனி சாமி மீனவர்களின் விசைப்படகை விடுதலை செய்ய வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதி வரும் இந்நிலையில் மீன்வளத்துறை அமைச்சர் மகிந்த அமரவீர, இன்று திடீரென் ஒரு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இந்த அறிவிப்பு தமிழக மீனவர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து வருகிற 6ம் தேதி இலங்கை நாடாளுமன்றத்தில் புதிய சட்டமாகவே நிறைவேற்றப்படும் எனவும் அதிர்ச்சியான தகவலையும் வெளியிட்டுள்ளார்.
இலங்கையில் பொருளாதார நெருக்கடியில் இருந்து மக்களை மீட்க முடியாத
மேலும்அங்கஜன் இராமநாதன் கோரிக்கை
மேலும்ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சார்பில் முன்னாள் அதிபர் மைத்திரிபால
மேலும்அதிபர் கோத்தபாய அரசாங்கம் சிங்கள பௌத்த மக்களுக்காகவும் தமிழ், முஸ்லிம்
மேலும்