img
img

மரண விளிம்பில் உள்ளவரை மீண்டும் உயிர்பிக்கும் புதிய வகை மருந்து கண்டுபிடிப்பு
வெள்ளி 30 ஜூன் 2017 17:09:10

img

மரணத்திற்குப் பின் வாழ்க்கை உண்டா, மரணத்திற்கு பின் என்ன நடக்கிறது என்ற கேள்வியைப்போல் சிக்கலான ஒரு கேள்வி வேறொன்றுமில்லை. மனிதனின் மனதை உலுக்கியெடுக்கிற இந்தக் கேள்வி இன்றுவரை ஒலித்துக்கொண்டிருக்கிறது. விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் கூறும் போது மூளை உயிருடன் இருக்கும் வரைதான் எல்லாமே. அது செயலிழந்து விட்டால் அனைத்தும் முடிந்து போய் விடும். அதன் பிறகு எதுவுமே கிடையாது. மரணம்தான் இறுதியானது. சொர்க்கமும் கிடையாது, நரகமும் கிடையாது, மறுபிறவியும் கிடையாது. என்கிறார்.இருந்தாலும் ஒவ்வோரு நாட்டிலும் மரணத்திற்கு பின் என்ன என்பதற்கான் ஆராய்ச்சிகள் நடந்து கொண்டுதான் இருக்கிறது. மரண விளிம்பில் உள்ளவரை சுமார் 4 மணி நேரம் வரை உயிர் பிழைக்க வைத்து சுற்றி உள்ளவர்களுடன் பேச வைக்கும் புதிய வகை மருந்து ஒன்று கண்டறியபட்டு உள்ளது. மரணம் விளிம்பில் இருக்கும் நோயாளிகளை மீண்டும் உயிர்ப்பிக்க ஒரு வகை துக்கமின்மை மருந்து உதவுகிறது. சோல்பிடிம்( Zolpidem) என்ற ஒருவகை மருந்து பல்வேறு நிலைகளில் வியத்தகு விளைவுகளை ஏற்படுத்தி உள்ளதை விஞ்ஞானிகள் கண்டறிந்து உள்ளனர். மிச்சிகன் பல்கலைக் கழக வல்லுனர்கள் கோமா,பார்கின்சன் நோய், பக்கவாதம் மற்றும் அதிர்ச்சிகரமான மூளை காயங்கள் அனுபவித்தவர்கள் உள்பட 20 நரம்பியல் கோளாறுகள் உள்ளவர்களிடம் மருந்து எவ்வாறு வேலை செய்கிறது என்பதை ஆய்வு செய்து உள்ளனர். இதில் அதிகமான நோயாளிகள் சோல்பிடிம் மருத்து கொடுக்கபட்ட பிறகு மேம்பட்டு உள்ளார்கள் என கண்டறியபட்டு உள்ளது. இந்த மருத்தின் விளைவு 4 மணி நேரம் இருக்கும். இந்த ஆய்வு குறித்து ஜாமா நரம்பியல் என்ற மருத்த இதழிலின் உதவி ஆசிரியர் மார்க் பீட்டர்சன் கூறும் போது சில நோயாளிகள், "குறைந்தபட்ச உணர்வுள்ள" நிலைக்கு முன்னேற்றம் அடைந்துள்ளனர், அங்கு அவர்கள் சுற்றியுள்ளவர்களுடன் பேச முயற்சித்தனர். இந்த அதிசய முரண்பாடுகளில் ஒன்று, தூக்கமின்மை அல்லது நரம்பியல் நிலைமைகள் கொண்ட நோயாளிகளுக்கு எதிர் தூக்கமின்மை இருப்பதால், தூக்கமின்மையின் விளைவுகள் காணப்படுகின்றன.எனினும், மேம்பாடுகள் சம்பந்தப்பட்ட நோயாளிகளில் ஒரு சிறிய பகுதியிலேயே மட்டுமே கண்டறியப்பட்டது. என கூறினார். டாக்டர் மார்ட்டின் பமலஸ்கி கூறும்போது நம் மருத்துவ நடைமுறையில் இதைப் பயன்படுத்த வேண்டும் என்பது பற்றிய கேள்விகளுக்கு பதில் அளிக்க இன்னும் இன்னும் கற்றுக்கொள்ள வேண்டும் என கூறினார்.

பின்செல்

உலகச் செய்திகள்

img
ராணி எலிசபெத் உடலுக்கு அஞ்சலி செலுத்த நாள் கணக்கில் காத்துக்கிடக்கும் மக்கள்

நேற்று முன்தினம் ராணி எலிசபெத்தின் உடல் அங்குள்ள செயிண்ட் கில்ஸ்

மேலும்
img
ராணி எலிசபெத் மறைவு ஒரு சகாப்தத்தின் முடிவு

இங்கிலாந்தின் ராணியாக சுமார் 70 ஆண்டு காலம் ஆட்சி புரிந்த, இரண்டாவது

மேலும்
img
வெவ்வேறு ஆண்டுகளில் வெவ்வேறு தசாப்தங்களில் பிறந்த இரட்டையர்கள்

வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்

மேலும்
img
பத்திகையாளர் ஜமால் கசோகி கொலை வழக்கில் 5 பேருக்கு தூக்குத் தண்டனை

இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை

மேலும்
img
16 ஆயிரம் வீரர்களுடன் அமெரிக்காவில் விண்வெளி படை

16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img