img
img

நானும் என் குழந்தையும்’... தாய்மையைக் கொண்டாடும் செரினா வில்லியம்ஸ்!
வெள்ளி 30 ஜூன் 2017 16:31:11

img

உலகின் தலைசிறந்த டென்னிஸ் வீராங்கனை செரினா வில்லியம்ஸின் காதல் கதை, வானிடிஃபேர் என்னும் பிரபல புத்தகத்தில் வெளியாகியுள்ளது. அந்தப் புத்தகத்தின் அட்டைப்படத்துக்குச் செரினா கொடுத்துள்ள போஸ், இணையத்தில் விவாதப் பொருளாக மாறியுள்ளது. புகைப்படம் வெளியாகி இரண்டு நாள் ஆன போதிலும் அதைப் பற்றிய பேச்சு ஓயவில்லை. அப்படி என்ன போஸ் கொடுத்தார் செரினா... சர்வதேச டென்னிஸ் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் 23 முறை கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்றவர் செரினா வில்லியம்ஸ். ரெடிட் சமூக வலைதளத்தின் இணை இயக்குநர் அலெக்சிஸ் ஓஹானியனுக்கும் செரினாவுக்கும் காதல் மலர்ந்தது. அவர்கள் இருவரும் திருமணம் செய்ய முடிவு செய்தனர். இந் நிலையில், இருவருக்கும் திருமணம் முடிவதற்கு முன்னரே செரினா கர்ப்பம் தரித்தார். ஆறு வார கருவை வயிற்றில் சுமந்துகொண்டுதான் இந்த ஆண்டு ஜனவரி மாதம் ஆஸ்திரேலிய கிராண்ட் ஸ்லாம் போட்டியில் பங்குபெற்றார். தன் சகோதரி வீனஸ் வில்லியம்ஸை வீழ்த்தி பட்டமும் பெற்றார். டென்னிஸே உலகம் என்று இருந்த செரினா அண்மையில்தான் கர்ப்பமாக இருக்கும் புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். இந்நிலையில், Vanity Fair என்னும் புத்தகத்தில் ’Serena Williams’s Love Match’ என்ற தலைப்பில் செரினாவின் காதல் வாழ்க்கை பற்றிய சிறப்பு கட்டுரை வெளியாகியுள்ளது. அந்தக் கட்டுரையை மையமாக வைத்து Vanity Fair புத்தகத்தின் அட்டைப்படம் வடிவமைக்கப்பட்டுள்ளது. அந்த அட்டைப்படத்தில் செரினா ஆடைகள் அணியாமல் தன் கர்ப்பத்தை முழுமையாகக் காட்டி, புகைப்படத்துக்குப் போஸ் கொடுத்துள்ளார். இந்தப் புகைப்படம்தான் நேற்றிலி ருந்து இணையத்தில் விவாதப் பொருளாக மாறியுள்ளது. ‘திருமணத்துக்கு முன் கர்ப்பம்’, ’கர்ப்பமாக இருந்தாலும் நிர்வாணப் புகைப்படம் தவறு’ போன்ற நெகட்டிவ் கமென்ட்டுகள் வந்திருந்தாலும் பெரும்பாலானோர் பாசிட்டிவாகத்தான் கமென்ட்ஸ் செய்துள்ளனர். குழந்தை பிறந்த பிறகு, திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்துள்ளதாம் செரினா-அலெக்சிஸ் ஜோடி!

பின்செல்

உலகச் செய்திகள்

img
ராணி எலிசபெத் உடலுக்கு அஞ்சலி செலுத்த நாள் கணக்கில் காத்துக்கிடக்கும் மக்கள்

நேற்று முன்தினம் ராணி எலிசபெத்தின் உடல் அங்குள்ள செயிண்ட் கில்ஸ்

மேலும்
img
ராணி எலிசபெத் மறைவு ஒரு சகாப்தத்தின் முடிவு

இங்கிலாந்தின் ராணியாக சுமார் 70 ஆண்டு காலம் ஆட்சி புரிந்த, இரண்டாவது

மேலும்
img
வெவ்வேறு ஆண்டுகளில் வெவ்வேறு தசாப்தங்களில் பிறந்த இரட்டையர்கள்

வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்

மேலும்
img
பத்திகையாளர் ஜமால் கசோகி கொலை வழக்கில் 5 பேருக்கு தூக்குத் தண்டனை

இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை

மேலும்
img
16 ஆயிரம் வீரர்களுடன் அமெரிக்காவில் விண்வெளி படை

16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img