ஓரினச் சேர்க்கைத் திருமணங்களைச் சட்டபூர்வமாக்க ஜெர்மனி நாடாளுமன்றத்தில் அனைத்து உறுப்பினர்களும் ஆதரவு தெரிவித்துள்ளனர். எனவே ஜெர்மனியில் விரைவில் ஓரினச் சேர்க்கைத் திருமணம் சட்டபூர்வமாக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜெர்மனி நாடாளுமன்றத்தில் (Bundestag) ஓரினச் சேர்க்கைத் திருமணத்தைச் சட்டபூர்வமாக்குவது குறித்த வாக்கெடுப்பு நடைபெற்றது. அந்த வாக் கெடுப்பில் மெஜாரிட்டி உறுப்பினர்கள் ஓரினச் சேர்க்கைத் திருமணத்துக்கு ஆதரவாக வாக்களித்தனர். இதையடுத்து ஓரினச் சேர்க்கைத் திருமணத்தைச் சட்டபூர்வமாக்கும் மசோதா (Same-sex marriage bill) இன்று ஜெர்மன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அதன்படி ஒரே பாலினத்தைச் சேர்ந்த இருவர் திருமணம் செய்துகொள்ள சட்டம் அனுமதிக்கும். மேலும், அந்த ஜோடி குழந்தையைத் தத்தெடுத்து வளர்க்கவும் அனுமதிக்கும். ஓரினச் சேர்க்கைத் திருமணத்துக்கு வாக்குகள் குவிந்ததைத் தொடர்ந்து நாடாளுமன்றத்தில் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது. ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மெர்க்கல், ஆரம்பத்திலிருந்தே ஓரினச் சேர்க்கைத் திருமணங்களுக்கு எதிராகக் கருத்துகள் கூறிவந்தார். இன்றைய நாடாளுமன்ற நிகழ்வு நிறைவுபெற்றதும் செய்தியாளர்களைச் சந்தித்த மெர்க்கல், தான் ஓரினச் சேர்க் கைத் திருமணத்துக்கு எதிராக வாக்களித்ததாக அதிரடியாகத் தெரிவித்தார். ஆனால், மற்ற உறுப்பினர்களின் விருப்பத்துக்கு ஏற்ப முடிவெடுக்க விரும்பு வதாகவும் தெரிவித்தார். ஏற்கெனவே பிரான்ஸ், பிரிட்டன், ஸ்பெயின் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் same sex marriage திருமணத்தைச் சட்டபூர்வமாக்கியுள்ள நிலையில் ஜெர் மனியும் இந்தப் பட்டியலில் இணைந்துள்ளது.
நேற்று முன்தினம் ராணி எலிசபெத்தின் உடல் அங்குள்ள செயிண்ட் கில்ஸ்
மேலும்இங்கிலாந்தின் ராணியாக சுமார் 70 ஆண்டு காலம் ஆட்சி புரிந்த, இரண்டாவது
மேலும்வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்
மேலும்இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை
மேலும்16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை
மேலும்