கொழும்பு, விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனைப் போல துணிச்சலான தமிழர் தலைமைகள் புதிதாக பிறந்துதான் வரவேண்டும் என இலங்கையின் மங்களராமய விகாரையின் தலைவர் அம்பிட்டிய சுமனரத்ன தேரர் தெரிவித்துள்ள கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர் நேற்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில், பிரபாகரனைப் போல அரசாங்கத் திற்கு சவால் விடுக்கும் தமிழ் தலைமைகள் யாரும் இப்போது இலங்கையில் இல்லை, இனி வருவார்கள் என்பதும் சந்தேகமே. அவரின் துணிச்சலும், போராடும் திறனும் இங்குள்ள தமிழர் தலைமைகளுக்கு ஒரு போதும் பொருந்தப்போவதுமில்லை, தமிழ் மக்களுக்கு நடக்கும் அநீதிகளை தட்டிக்கேட்க பிரபாகரனைப் போன்ற ஒருதலைமையை இனி எங்கு தேடி னாலும் கிடைக்கப் போவதில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், சில இனவாத சக்திகள் தம்மை தமிழர்களின் பிரதிநிதிகள் என சொல்லிக்கொண்டு கிழக்கையும், வடக்கையும் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து தமிழ் மக்களை அடக்க திரைமறைவில் முயல்கின்றனர்.இந்த செயல்பாடுகள் தமிழ் மக்களின் எதிர்காலத்தை பாழாக்குமே தவிர ஒருபோதும் தீர்மானிக்காது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். நாட்டின் பிரபலமான ஒரு மதத் தலைவர் இவ்வாறான கருத்துக்களை துணிந்து வெளியிட்டிருந்தமை இலங்கையில் பரபரப்பான செய்தியாக பார்க்கப் பட்டதுடன் பிரபாகரன் மீது சிங்களவர்கள் கொண்டுள்ள நம்பிக்கையும், அவர் இல்லாத நிலையில் நடைபெறும் அரசியல் சிக்கல்களும் தெளிவாகப் புலப் படுகின்றன என ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.
இலங்கையில் பொருளாதார நெருக்கடியில் இருந்து மக்களை மீட்க முடியாத
மேலும்அங்கஜன் இராமநாதன் கோரிக்கை
மேலும்ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சார்பில் முன்னாள் அதிபர் மைத்திரிபால
மேலும்அதிபர் கோத்தபாய அரசாங்கம் சிங்கள பௌத்த மக்களுக்காகவும் தமிழ், முஸ்லிம்
மேலும்