வடமாகாண சபையின் புதிய அமைச்சர்களாக அனந்தி சசிதரன் மற்றும் சர்வேஸ்வரன் ஆகியோர் இன்று காலை ஆளுநர் முன்னிலையில் பதவியேற் றுள்ளனர். மகளிர் விவகாரம், சமூக சேவைகள் மற்றும் புனர்வாழ்வு அமைச்சராக அனந்தி சசிதரனும், கல்வி மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சராக கந்தையா சர்வேஸ்வரனும் நியமிக்கப்பட்டுள்ளனர். அத்துடன், விவசாய கால்நடை மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சராக சீ.வி.விக்னேஸ்வரன் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார்.இதேவேளை, புதிய அமைச் சர்களை நியமிப்பது தொடர்பில் நேற்று மாலை முதலமைச்சர் மற்றும் அவருக்கு ஆதரவான உறுப்பினர்களுடன் அவசர சந்திப்பொன்று இடம்பெற்றி ருந்தது. இந்த சந்திப்பினையடுத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த வடமாகாண முதலமைச்சர் புதிய அமைச்சர்கள் தொடர்பான அறிவிப்பை வெளியிட் டிருந்தார்.அத்துடன் குறித்த இரு அமைச்சர்களும் 3 மாதங்களுக்கு தற்காலிகமாக நியமிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டதாகவும் முதலமைச்சர் தெரிவித்திருந் தார்.
இலங்கையில் பொருளாதார நெருக்கடியில் இருந்து மக்களை மீட்க முடியாத
மேலும்அங்கஜன் இராமநாதன் கோரிக்கை
மேலும்ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சார்பில் முன்னாள் அதிபர் மைத்திரிபால
மேலும்அதிபர் கோத்தபாய அரசாங்கம் சிங்கள பௌத்த மக்களுக்காகவும் தமிழ், முஸ்லிம்
மேலும்