ஷாங்காய், சீனாவில் விமானத்தின் இன்ஜினில் சில்லறை நாணயங் களை மூதாட்டி வீசி எறிந்த சம்பவத்தால், விமானத்தில் இருந்த 150 பயணிகள் அவசரமாக வெளியேற்றப் பட்டுள்ளனர். சீனாவில் சீனா தெற்கு விமானம் நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் ஒன்று ஷாங்காய் மாநகரில் உள்ள புடோங் சர் வதேச விமான நிலையத்தில் இருந்து குவாங்சோவுக்கு செவ்வாய்க்கிழமை நண்பகல் 12.40 மணிக்கு புறப்படுவதற்கு தயாராக இருந்துள்ளது. அப்போது விமானத்தில் ஏறுவதற்காக படிக்கட்டு அருகில் வந்த கியூய் என்ற மூதாட்டி விமானத்தின் இடது பக்கத்தில் உள்ள இன்ஜினில் சில்லரை நாண யங்கள் சிலவற்றை வீசியுள்ளார். இதைக் கண்ட சகபயணி ஒருவர் அந்த மூதாட்டி விமானத்தின் இன்ஜினில் நாணயங்கள் வீசியதை அங்கிருக்கும் அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார். இதனால் பயணிகள் நலன் கருதி, விமானத்தின் உள்ளே இருந்து 150-பயணிகளும் உடனடியாக வெளியேற்றப்பட்டனர். அதன் பின்னர் விமானத்தின் இன் ஜினை சோதனை செய்ததில் 9-சில்லரை நாணயங்களை அந்த மூதாட்டி வீசியிருந்தது தெரியவந்தது. இது குறித்து விமானம் நிறுவனம் தெரி விக்கையில், விமானத்தின் இன்ஜினை சோதனை செய்ததில் 9 சில்லரை நாணயங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் அவை அனைத்தையும் எடுத்து விட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த மூதாட்டி பிரார்த்தனை செய்து நாணயங்களை இப்படி வீசி உள்ளார். பாதுகாப்பான ஒரு பயணத்துக்காக பிரார்த்தித்தேன் என்று போலீசாரிடம் தன் செய்கைக்கான விளக்கத்தை பாட்டி கொடுத்துள்ளார். மேலும் அவர் விமானம் எந்த ஒரு விபத்துமின்றி நல்லபடியாக செல்ல வேண்டும் என்பதற்காகவே இது போன்று செய்துள்ளார். மற்றபடி அவர் மீது எந்த ஒரு குற்ற நடவடிக்கைகளும் இல்லை, மனநலம் பாதிக்கப்பட்டவரும் இல்லை என்று விமான நிர் வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த மூதாட்டியின் இந்த செயலால் விமானப் பயணம் 5 மணி நேரம் காலதாமதமானது. ஷாங்காய் புடோங் விமான நிலையமானது மிக பிரசித்திப் பெற்ற விமான நிலையமாகும். ஆண்டுக்கு 6 கோடியே 60 லட்சம் பயணிகளை கையாளுகிறது.
நேற்று முன்தினம் ராணி எலிசபெத்தின் உடல் அங்குள்ள செயிண்ட் கில்ஸ்
மேலும்இங்கிலாந்தின் ராணியாக சுமார் 70 ஆண்டு காலம் ஆட்சி புரிந்த, இரண்டாவது
மேலும்வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்
மேலும்இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை
மேலும்16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை
மேலும்