பெய்ஜிங் சீனாவில் தொடரும் கனமழையால் பல மாகாணங்கள் வெள்ளக்காடாகியுள்ளன. பல ஆயிரக்கணக்கான மக்கள் தங்களது வீடுகளையும், உடைமைகளையும் இழந்து பரிதவித்து வருகின்றனர். யுனான் மாகாணத்தில் கடந்த 18-ம் தேதி முதல் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளன. தாழ்வான இடங்களில் வசிக்கும் மக்கள் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். நூற்றுக்கணக்கான வீடுகள் நிலச்சரிவு மற்றும் வெள்ளத்தில் சிக்கி இடிந்துவிட்டன. பல லட்சம் ஏக்கர் விளைநிலங்கள் முற்றிலுமாக பாழாகியுள்ளன. நீர் நிலைகள் நிரம்பி வழிவதால் அணைகள் உடையும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. ஜியாங்சங் நகரில் ஆற்றின் குறுக்கே உள்ள ரயில் தண்டவாளத்தை பாதுகாக்க 100 நீடி நீர்மட்டத்தை தாங்கி நிற்கும் அணையில் மிகுந்த எச்சரிக்கையோடு குண்டு வைத்து வெடிக்க செய்யப்பட்டது. மதகுகளை ஒட்டி காட் டாற்று வெள்ளம் போல மிகவும் ஆபத்தான நிலையில் தண்ணீர் வெளியேறுவதை தடுக்கவே இந்நடவடிக்கை எடுக்கப்பட்டது. நீரோட்ட இடைவெளி அதி கரித்து வேகம் குறைந்து மிக சுலபமாக தண்ணீர் வெளியேறும் என்பதே இதன் யுக்தி. வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கிய இறந்தவர்களின் எண் ணிக்கை பலநூறை தாண்டியுள்ளது. ஏராளமானோர் மாயமாகியுள்ளனர். அவர்களை தேடும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது.
நேற்று முன்தினம் ராணி எலிசபெத்தின் உடல் அங்குள்ள செயிண்ட் கில்ஸ்
மேலும்இங்கிலாந்தின் ராணியாக சுமார் 70 ஆண்டு காலம் ஆட்சி புரிந்த, இரண்டாவது
மேலும்வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்
மேலும்இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை
மேலும்16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை
மேலும்