கராகஸ் வெனிசுலா நாட்டில் உள்ள சுப்ரீம் கோர்ட் மீது ஹெலிகாப்டர் மூலம் தாக்குதல் நடத்தியதற்கு அந்நாட்டு அதிபர் நிக்கோலஸ் மடுரோ கண்டனம் தெரிவித்துள்ளார். அதிபர் நிக்கோலஸ் மடுரோவிற்கு எதிராக கடந்த 3 மாதங்களுக்கும் மேலாக பல்வேறு வன்முறை சம்பவங்களும், போராட்டங்களும் வெனிசுலாவில் தொடர்ந்த வண்ணம் உள்ளன. அதிபர் நிக்கோலஸ் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வரும் நிலையில், தலைநகர் கராகஸில் உள்ள சுப்ரீம் கோர்ட் மீது ராணுவ அதிகாரி ஹெலிகாப்டர் மூலம் தாக்குதல் நடத்தியுள்ளார். சுப்ரீம் கோர்டை சுற்றி ஹெலிகாப்டரில் வந்த அவர் துப்பாக்கி மற்றும் கையெறி குண்டுகளை வீசி தாக்குதலில் ஈடபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த தாக்குதல் குறித்து ராணுவ அதிகாரி ஆஸ்கார் பெரெஸ் இன்ஸ்டாகிராமில் தாம் பேசிய வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில் அவர் வெனிசுலா மக்களே, அன்பு சகோதரர்களே! சமாதானத்திற்காகவும், இடைக்கால குற்றவியல் அரசாங்கத்திற்கு எதிராகவும் தாங்கள் ஒரு குழுவாக உள்ளோம் என்றார். தாங்கள் எந்த ஒரு அரசியல் கட்சி சார்ந்தவர்களோ அல்லது அமைப்பை சேர்ந்தவர்களோ இல்லை. நாங்கள் தேசியவாதிகள் மற்றும் நாட்டுப் பற்று மிக்கவர்கள். இந்த தாக்குதல் பொறுப்பற்ற அரசுக்கு எதிரானது என பேசியுள்ளார். தாக்குதல் நடைபெற்ற பகுதியில் அதிபர் மாளிகையும், அரசு அலுவலகங்களும் உள்ளதால் பரபரப்பும், பதற்றமும் ஏற்பட்டது. இத்தாக்குதலில் ஏற்பட்ட உயிர்சேதம் அல்லது காயமடைந்தவர்கள் பற்றிய விவரங்கள் ஏதும் வெளியிடப்படவில்லை. தனது எதிர்ப்பாளர்களின் இந்த தீவிரவாத தாக்குதலுக்கு வெனிசுலா அதிபர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அதிபருக்கு எதிராக நடைபெற்று வரும் வன்முறை மற்றும் போராட்டத்தில் இதுவரை 75 பேர் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
நேற்று முன்தினம் ராணி எலிசபெத்தின் உடல் அங்குள்ள செயிண்ட் கில்ஸ்
மேலும்இங்கிலாந்தின் ராணியாக சுமார் 70 ஆண்டு காலம் ஆட்சி புரிந்த, இரண்டாவது
மேலும்வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்
மேலும்இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை
மேலும்16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை
மேலும்