அரசுமுறைப் பயணமாக அமெரிக்கா சென்றிருக்கும் மோடியை அதிபர் டிரம்ப்பும், மெலனியாவும் சிவப்புக் கம்பள உபசரிப்போடு வெள்ளை மாளிகைக்குள் வரவேற்றார்கள். அமெரிக்கா சுற்றுப்பயணம் சென்றுள்ள பிரதமர் மோடி, இன்று வெள்ளை மாளிகையில் அதிபர் ட்ரம்பைச் சந்தித்தார். இதையடுத்து அவர்கள் இருவரும் வெள்ளை மாளிகையில் உள்ள அறையில் உரையாடினார்கள். அப்போது பிரதமர் மோடி குறித்து அதிபர் ட்ரம்ப், "மோடி ஒரு சிறந்த பிரதமர். அவரைப் பற்றி படித்தும், கேள்விப்பட்டும் நிறைய தெரிந்துகொண்டுள்ளேன். அவர் இந்தியாவைப் பொருளாதார ரீதியாக சிறப்பாக முன்னேற்றிக் கொண்டிருக் கிறார்" என்று கூறினார். இதையடுத்துப் பேசிய பிரதமர் மோடி, "ட்ரம்ப்பும், மெலனியாவும் சிறப்பான வரவேற்பை அளித்தனர். இந்த வரவேற்பானது இந்தியாவில் உள்ள 125 கோடி மக்களுக்கு அளிக்கப்பட்ட வரவேற்பாகப் பார்க்கிறேன். இந்த சந்திப்பில் நான் பேச நிறைய இருக்கிறது. மேலும், அமெரிக்க அதிபர் இந்தியாவின் முன் னேற்றத்தின்மீது ஆர்வமாக இருக்கிறார்" என்று கூறியுள்ளார்.
நேற்று முன்தினம் ராணி எலிசபெத்தின் உடல் அங்குள்ள செயிண்ட் கில்ஸ்
மேலும்இங்கிலாந்தின் ராணியாக சுமார் 70 ஆண்டு காலம் ஆட்சி புரிந்த, இரண்டாவது
மேலும்வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்
மேலும்இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை
மேலும்16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை
மேலும்