கடந்த 29 ஆண்டுகளாக, அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் உள்ள பெட்டலுமாவில், 'உலகின் அசிங்கமான நாய்' என்ற போட்டி நடந்து வருகிறது. இந்த வருடம் நடந்த போட்டியில் 13 நாய்களைத் தோற்கடித்து பட்டத்தைக் கைப்பற்றியுள்ளது 3 வயது மாஸ்டினோ இனத்தைச் சேர்ந்த மார்த்தா என்கிற நாய். சிவப்பு நிற கண்கள், அதிக சதை, கறுப்பு நிறம் எனப் பார்வையாளர்களை அதிகம் கவர்ந்தது மார்த்தாதான். மார்த்தா பற்றி அதன் உரிமையாளர் ஜின்ட்லர் கூறுகையில், "இதை நாய்கள் பாதுகாப்பு மையத்திலிருந்து தத்தெடுத்தோம், அப்போது, மார்த்தாவுக்கு பார்க்கும் திறனில்லை. பல அறுவை சிகிச்சைகளுக்குப் பிறகே அதனால் பார்க்க முடிகிறது" என்றார். சாம்பியன் பட்டம் வென்ற மார்த்தாவுக்கு, வெற்றிக்கான கோப்பையும் 1,500 அமெரிக்க டாலரும் பரிசாக வழங்கப்பட்டது. அகோர கண்கள் கொண்ட நாய், வித்தியாசமான பற்களைக் கொண்ட நாய் என, போட்டியில் பல நாய்கள் பங்கேற்றன. பொதுவாக, உலகின் அழகான விஷயங்களுக்காகப் போட்டி நடை பெறுவது வழக்கம். ஆனால், இவர்கள் உலகின் அசிங்கமான நாய்களுக்கு பட்டம் வழங்கிச் சிறப்பிக்கிறார்கள். இந்தப் போட்டி, நாய்களைத் தத்தெடுப்ப தற்கான விழிப்பு உணர்வுக்காக நடத்தப்படுகிறது.
நேற்று முன்தினம் ராணி எலிசபெத்தின் உடல் அங்குள்ள செயிண்ட் கில்ஸ்
மேலும்இங்கிலாந்தின் ராணியாக சுமார் 70 ஆண்டு காலம் ஆட்சி புரிந்த, இரண்டாவது
மேலும்வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்
மேலும்இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை
மேலும்16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை
மேலும்