இஸ்லாமியர்களின் புனித ஸ்தலமான மெக்காவில் நடக்கவிருந்த பயங்கரவாதத் தாக்குதல் திட்டம் முறியடிக்கப்பட்டுள்ளதாக சவுதி அரசு தெரிவித்துள் ளது. ரம்ஜான் மாதம் என்பதால் உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமியர்கள் சவுதியில் உள்ள மெக்காவில் திரண்டு தொழுகை செய்வது வழக்கம். இந் நிலை யில், நேற்று மெக்காவில் தொழுகை நடந்துகொண்டிருந்தபோது மசூதிக்குள் நுழைய தீவிரவாதி ஒருவன் முற்பட்டுள்ளான். காவலர்கள் தடுத்து நிறுத்திய போது உடலில் கட்டிவைத்திருந்த குண்டுகளை வெடிக்க செய்துள்ளான். இந்த குண்டு வெடிப்பில் காவலர்கள் உட்பட 11 பேர் படுகாயமடைந்தனர். இதை யடுத்து, அந்த தீவிரவாதியை பாதுகாப்புப் படையினர் சுட்டுக்கொன்றனர். மெக்காவில் தற்கொலைப்படைத் தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் திட்டமிட்டது முன்னரே கண்டறியப்பட்டுவிட்டதாக சவுதி அரசு தெரிவித்துள்ளது. சவுதி அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையால்தான் மெக்காவின் உள்ளே தீவிரவாதி நுழையாமல் தடுக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளி யிட்டுள்ளன. தீவிரவாதிகளின் தாக்குதல் திட்டம் முறியடிக்கப்பட்டுள்ளதால் உயிர்ப்பலி தவிர்க்கப்பட்டுள்ளது.
நேற்று முன்தினம் ராணி எலிசபெத்தின் உடல் அங்குள்ள செயிண்ட் கில்ஸ்
மேலும்இங்கிலாந்தின் ராணியாக சுமார் 70 ஆண்டு காலம் ஆட்சி புரிந்த, இரண்டாவது
மேலும்வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்
மேலும்இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை
மேலும்16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை
மேலும்