இலங்கையின் வடக்கு மாகாண முதல்வர் விக்னேஸ்வரன் இனவாதக் கருத்துக்களை வெளியிட்டு, மக்களை தூண்டி விட்டு விடுதலைப் புலிகளுக்கு மீண்டும் உயிரூட்ட நினைக்கிறார், அவரைத் தண்டிப்பதற்கான உடனடி நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும் என அமைச்சரும் பீல்ட் மார்ஷலுமான முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா கூறியுள்ளார். கடவத்த ரன்முதுகலையில் விகாரை ஒன்றில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே இவ்வாறு கூறினார். மேலும் இராணுவ வீரர்களின் அர்ப்பணிப்பிலும், அயராத உழைப்பிலும்தான் விடுதலைப் புலிகளைத் தோற்கடித்து இன்று வடக்கு மக்கள் சுதந்திரமாக வாழ் கிறார்கள் என்பதை மறந்துவிடக்கூடாது. அதற்கு பாதகம் ஏற்படுத்தும் வகையில் எவரேனும் செயற்பட்டால் அதற்கு கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டார். அண்மைக் காலமாக வடக்கு முதல்வரின் செயல்பாடுகள் தமிழர்கள் மத்தியில் பெரும் கவனத்தை ஈர்த்துவரும் அதேவேளை அரசாங்கத்திற்கு அச்சுறுத்தலாகவும் விளங்குகிறது. இந்த நிலை மாறவும், அதை தடுத்து நிறுத்தவும், அரசு விரைந்து நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டதாக இலங்கையில் செய்திகள் வௌியாகின.
இலங்கையில் பொருளாதார நெருக்கடியில் இருந்து மக்களை மீட்க முடியாத
மேலும்அங்கஜன் இராமநாதன் கோரிக்கை
மேலும்ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சார்பில் முன்னாள் அதிபர் மைத்திரிபால
மேலும்அதிபர் கோத்தபாய அரசாங்கம் சிங்கள பௌத்த மக்களுக்காகவும் தமிழ், முஸ்லிம்
மேலும்