img
img

2024-ல் மக்கள் தொகையில் சீனாவை பின்னுக்கு தள்ளி இந்தியா முதலிடம் பிடிக்கும்
வியாழன் 22 ஜூன் 2017 16:05:53

img

ஐநா: 2024ம் ஆண்டில் மக்கள் தொகை எண்ணிக்கையில் சீனாவை பின்னுக்கு தள்ளி இந்தியா முதலிடம் பிடிக்கும் என ஐ.நா., தெரிவித்துள்ளது. இது தொடர்பாக நடந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளதாவது: தற்போது சீன மக்கள் தொகை 141 கோடியாகவும், இந்திய மக்கள் தொகை 134 கோடியாகவும் உள் ளது. இது உலக மக்கள் தொகையில் முறையே 19 மற்றும் 18 சதவீதமாகும். அடுத்த 7 வருடத்தில் மக்கள் தொகை எண்ணிக்கையில் சீனாவை இந்தியா முந்தும். 2024ல் இரு நாடுகளின் மக்கள் தொகை தலா 144 கோடியாக இருக்கும். இதன் பின்னர் தொடர்ந்து அதிகரிக்கும் இந்திய மக்கள் தொகை 2030ல் 150 கோடி யாகவும், 2050ல் 166 கோடியாகவும் இருக்கும். அதேநேரத்தில், சீன மக்கள் தொகை 2030 வரை நிலையாகவும் இருக்கும். இதன் பின்னர் குறைய துவங் கும். ஆனால் இந்திய மக்கள் தொகை 2050க்கு பிறகே குறைய துவங்கும் என அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது. அதேநேரத்தில் உலகளவில் மக்கள் தொகையில் இந்தியா முதலிடத்தில் இருக்கும். முன்னதாக இந்திய மக்கள் தொகை 2022ல் சீனாவை தாண்டும் என கணக்கிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

பின்செல்

உலகச் செய்திகள்

img
ராணி எலிசபெத் உடலுக்கு அஞ்சலி செலுத்த நாள் கணக்கில் காத்துக்கிடக்கும் மக்கள்

நேற்று முன்தினம் ராணி எலிசபெத்தின் உடல் அங்குள்ள செயிண்ட் கில்ஸ்

மேலும்
img
ராணி எலிசபெத் மறைவு ஒரு சகாப்தத்தின் முடிவு

இங்கிலாந்தின் ராணியாக சுமார் 70 ஆண்டு காலம் ஆட்சி புரிந்த, இரண்டாவது

மேலும்
img
வெவ்வேறு ஆண்டுகளில் வெவ்வேறு தசாப்தங்களில் பிறந்த இரட்டையர்கள்

வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்

மேலும்
img
பத்திகையாளர் ஜமால் கசோகி கொலை வழக்கில் 5 பேருக்கு தூக்குத் தண்டனை

இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை

மேலும்
img
16 ஆயிரம் வீரர்களுடன் அமெரிக்காவில் விண்வெளி படை

16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img