சியோல், வடகொரியாவால் கைது செய்யப்பட்டு உடல் நலம் பாதிக்கப்பட்ட பிறகு விடுவிக்கப்பட்ட அமெரிக்க மாணவர் ஒட்டோ வாரம்பியர் (வயது 22). கோமா நிலையிலேயே உயிரிழந்தார். இந்த சம்பவத்தால் வடகொரியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே மோதல் அதிகரித்துள்ள நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று வடகொரியா கடுமையாக விமர்சித்துள்ளது. வடகொரியாவின் அரசு நாளிதழான சின்மன் செய்தித்தாளில் எழுதப்பட்டுள்ள கட்டுரையில் கூறியிருப்பதாவது:- “ அமெரிக்க அதிபர் கடினமான சூழ் நிலையில் உள்ளார். எனவே மக்களை திசைத் திருப்ப வடகொரியா மீது முன் தவிர்ப்புத் தாக்குதலை நடத்தி விடலாம் என்ற யோசனையுடன் அமெரிக்கா விளையாடி வருகிறது. மனநிலை பாதிக்கப்பட்ட ட்ரம்பின் ஆலோசனைகளைப் பின்பற்றினால் தென் கொரியாவுக்கு பேரழிவு ஏற்படும் என்பதை அந்நாடு உணர வேண்டும்” இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று முன்தினம் ராணி எலிசபெத்தின் உடல் அங்குள்ள செயிண்ட் கில்ஸ்
மேலும்இங்கிலாந்தின் ராணியாக சுமார் 70 ஆண்டு காலம் ஆட்சி புரிந்த, இரண்டாவது
மேலும்வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்
மேலும்இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை
மேலும்16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை
மேலும்