நாளை யோகா தினம் கொண்டாடப்படுவதையொட்டி, சீனப் பெருஞ்சுவரில் யோகா ஆர்வலர்கள் கூட்டாகச் சேர்ந்து யோகா பயிற்சியில் ஈடுபட்டனர். நாளை, உலக யோகா தினம் கொண்டாடப்படுகிறது. யோகாவின் மகத்துவத்தை உலகுக்கு எடுத்துச் சொல்லவும் அதைப் பற்றிய விழிப்பு உணர்வை ஏற் படுத்தும் நோக்கிலும் ஒவ்வொர் ஆண்டும் ஜூன் 21ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்திய அரசால் கடந்த 2015 ஆம் ஆண்டு இதற்கான முயற்சி முன்னெடுக்கப்பட்டது. ஐ.நா சபையின் அங்கீகாரம் பெற்றதால் ஒவ்வொர் ஆண்டும் யோகாவின் வீச்சு சர்வதேச அளவில் அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்நிலையில், யோகாவைப் பற்றி சீனாவில் விழிப்பு உணர்வு ஏற்படுத்த, உலக அதிசயங்களில் ஒன்றான சீனப் பெருஞ்சுவரில் பெரும் திரளான யோகா ஆர்வலர்கள் பங்கேற்று பல்வேறு யோகா பயிற்சிகள் செய்தனர். இதில் சீனர்கள் மற்றும் இந்தியர்கள் கூட்டாகப் பங்கேற்றது கூடுதல் சிறப்பாக அமைந் தது. சீன தலைநகர் பீஜிங்கிலுள்ள இந்தியத் தூதரகம் மூலம் இந்த நிகழ்ச்சி ஒருங்கிணைக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில், மத்திய அமைச்சர் வி.கே.சிங் பங் கேற்று, யோகா ஆர்வலர்களுடன் பயிற்சியில் ஈடுபட்டார்.
நேற்று முன்தினம் ராணி எலிசபெத்தின் உடல் அங்குள்ள செயிண்ட் கில்ஸ்
மேலும்இங்கிலாந்தின் ராணியாக சுமார் 70 ஆண்டு காலம் ஆட்சி புரிந்த, இரண்டாவது
மேலும்வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்
மேலும்இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை
மேலும்16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை
மேலும்