தனது குடும்பப் பிரச்னை பெரும் சர்ச்சையைக் கிளப்பிய நிலையில், அதற்கு வருத்தம் தெரிவித்து சிங்கப்பூர் மக்களிடம் மன்னிப்புக் கேட்டுள்ளார், அந்த நாட்டுப் பிரதமர் லீ சியென் லூங். நேற்று முன்தினம் மாலை 6 மணியளவில் பொதுமக்களிடம் காணொளிக் காட்சி மூலம் உரையாற்றினார், சிங்கப்பூர் பிரதமர் லீ. அப்போது பேசிய அவர், '38 ஆக்ஸ்லி ரோட்டிலுள்ள எங்களின் குடும்ப இல்லம் தொடர்பான விவகாரம் பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது. இந்தப் பூர்வீக வீடு பற்றி கடந்த சில நாள்களாக என் சகோதரர்களுக்கும் எனக்குமிடையே சில கருத்து வேறுபாடுகள் நிலவிவருகின்றன. எனக்கும், என் உடன் பிறப் புகளுக்கும் இடையிலான இந்த சர்ச்சை தொடர்பாக நான் சிங்கப்பூர் மக்களாகிய உங்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். இந்த விவகாரம், என்னையும் எனது அமைச்சரவையைச் சார்ந்த உறுப்பினர்களையும் நாட்டை நிர்வகித்து வரும் தங்கள் பொறுப்பிலிருந்து நிச்சயம் திசை திருப்பாது என்று நான் உங்களிடம் உறுதிபட தெரிவித்துக்கொள்கிறேன்', என்றார். 'சிங்கப்பூரின் தந்தை' என்றழைக்கப்படும் லீ குவான் யூ-வின் மூத்த மகன்தான் இந்த லீ சியென் லூங். நாட்டை ஆளும் பிரதமர் ஒருவர் இவ்வகையான வெளிப்படைத்தன்மையோடும் பொறுப்புஉணர்வோடும் செயல்பட்டது, சமூகத் தளங்களில் அவருக்குப் பெரும் பாராட்டைப் பெற்றுத்தந்துள்ளது.
வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்
மேலும்இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை
மேலும்16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை
மேலும்தூக்குத் தண்டனை நிறைவேற்றப்படும் முன்பே முஷரப் இறந்துவிட்டால், அவரது
மேலும்Facebook Twitter Mail Text Size Printஅமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் பதவி நீக்க கோரும்
மேலும்