மரண தண்டனையை நிறுத்தி வைக்குமாறு குற்றவாளிகள் சார்ந்த நாட்டின் தூதரகங்கள் இந்தோனேசிய அரசை கேட்டுக் கொண்டன. மரண தண்டனையை கைவிடக் கோரி பல்வேறு நாடுகளில் போராட்டங்களும் நடந்தன. சமூக ஆர்வலர்களும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்நிலையில் நேற்றிரவு 4 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டு விட்டதாக இந்தோனேசிய அரசு அறிவித்துள்ளது. மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட 4 பேரில் இருவர் நைஜிரியர்கள், ஒருவர் இந்தோனேசியர், மற்றொருவர் செனகல் நாட்டைச் சேர்ந்தவர் ஆவர். இது பற்றி செய்தியாளர்களிடம் பேசிய அந்நாட்டின் அட்டர்னி ஜெனரல் அதிகாரியான நூர் ரச்மத், மரண தண்டனை நிறைவேற்றப்பட்டவர்களின் பெயர்களை அறிவித்தார். அவர்கள் ஃபிரெடி புதிமான், செக் ஒஸ்மானி, மைக்கேல் டிட்டஸ், ஹும்ப்ரே ஆவர். மத்திய ஜாவாவில் உள்ள நுசகம்பங்கன் சிறையில் அவர்களுக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டதாக குறிப்பிட்டார். மீதமுள்ள 10 பேருக்கும் இந்த வார இறுதிக்குள் மரண தண்டனையை நிறைவேற்ற தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 14 பேரும் கடந்த 2004-ம் ஆண்டு போதை பொருட்களை கடத்தியதாக தொடரப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள். இவர்களில் இந்தியாவின் குர்தீப் சிங் என்பவரும் அடங்குவார். போதை பொருட்கள் கடத்தல் வழக்கில் தண்டனையை நிறுத்தி வைப்பதில் அதிபர் ஜோகோவிடோடோ எந்த சமரசமும் செய்து கொள்வதில்லை. ஆனால் தண்டனையை நிறுத்தி வைக்க கடைசி நிமிடம் வரை போராட தயார் என இந்தியா, பாகிஸ்தான் நாடுகள் அறிவித்துள்ளன
நேற்று முன்தினம் ராணி எலிசபெத்தின் உடல் அங்குள்ள செயிண்ட் கில்ஸ்
மேலும்இங்கிலாந்தின் ராணியாக சுமார் 70 ஆண்டு காலம் ஆட்சி புரிந்த, இரண்டாவது
மேலும்வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்
மேலும்இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை
மேலும்16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை
மேலும்