லண்டன்: லண்டன் தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தனது பாக்கெட் மணியை தானம் வழங்கிய 6 வயது சிறுவனின் செயல் நெஞ்சை உருக வைத்துள்ளது. கடந்த 14ஆம் தேதி மேற்கு லண்டனில் உள்ள க்ரீன்பெல் அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சுமார் 30க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்ததாக அந்நாட்டு அரசு அறிவித்திருந்தது. மேலும் தற்போது அந்த கட்டடத்தில் இறந்தவர்களைத் தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. இந்த தீ விபத்து லண்டனை மட்டுமல்லாமல் நாடு முழுவதும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தனது பாக்கெட் மணியை 6 வயது சிறுவன் ஒருவன் தானம் வழங்கியுள்ளான். லண்டனை சேர்ந் தவர் ஆர்தர். இவரின் மகன் தான் சிறுவன் ஆல்ஃபி லிண்ட்ஸே. தீ விபத்து தொடர்பான காட்சிகளை தொலைக்காட்சியில் கண்ட ஆல்ஃபி அவர்களுக்கு உதவ முடிவு எடுத்தார். அதன்படி தனது உண்டியலில் இருந்த 70 பவுண்டுகள் பணத்தினை தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கினார். தீவிபத்து ஏற்பட்ட கிரென்ஃபெல் டவர்கட்டடத்துக்கு தனது தந்தையுடன் நேரில் சென்ற ஆல்ஃபி கென்ஸிங்டன் ஆயரான கிரஹாம் டாம்லினிடம் தான்வைத்திருந்த பணத்தை வழங்கினார். சிறுவன் ஆல்ஃபியின் இந்த செயல் நெகிழ்ச்சிகரமாக இருந்ததாக ஆயர் கிரஹாம் தெரிவித்துள்ளார்.
வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்
மேலும்இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை
மேலும்16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை
மேலும்தூக்குத் தண்டனை நிறைவேற்றப்படும் முன்பே முஷரப் இறந்துவிட்டால், அவரது
மேலும்Facebook Twitter Mail Text Size Printஅமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் பதவி நீக்க கோரும்
மேலும்