உலக அகதிகள் தினத்தை முன்னிட்டு சிரியாவைச் சேர்ந்த அகதியான முசூன் அல்மெலெஹான் (19) யுனிசெஃபின் நல்லெண்ணத் தூதராக நியமிக்கப் பட்டுள்ளார். ஜூன் 20 ஆம் தேதி (இன்று) உலக அகதிகள் தினமாகக் கொண்டாடப்படுகிறது. இந்நிலையில்உலக அகதிகள் தினத்தை முன்னிட்டு சிரியா அகதி முசூன் அல்மெலெஹான், யுனிசெஃபின் நல்லெண்ணத் தூதராக நியமிக்கப்பட்டுள்ளார். 19 வயதான இவர் யுனிசெஃபின் இளம் தூதராவார். 2013 ஆம் ஆண்டு சிரியாவில் நடைபெற்ற உள்நாட்டுப் போரால் பாதிக்கப்பட்டு, 16 வயது சிறுமி முசூன் அல்மெலெஹான் அகதியாக ஜோர்டன் வந்தார். அவர் புலம் பெயர்ந்தவர்களின் கல்வி குறித்து தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார். 'சிறு வயதில் இருந்தபோதே கல்விதான் எனது எதிர்காலத்தை தீர் மானிக்கும் என்று தோன்றியது. நான் சிரியாவில் இருந்து வெளியேறியபோது எனது புத்தகங்களை மட்டுமே எடுத்துக் கொண்டேன்' எனக் கூறியுள்ளார் முசூன் அல்மெலெஹான்.
நேற்று முன்தினம் ராணி எலிசபெத்தின் உடல் அங்குள்ள செயிண்ட் கில்ஸ்
மேலும்இங்கிலாந்தின் ராணியாக சுமார் 70 ஆண்டு காலம் ஆட்சி புரிந்த, இரண்டாவது
மேலும்வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்
மேலும்இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை
மேலும்16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை
மேலும்