நைஜீரியாவில் நடந்த தற்கொலைப் படை தாக்குதலில் 16 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். நைஜீரியாவில், தொடர்ந்து போகோ ஹராம் தீவிரவாதிகள் பல்வேறு தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். ஷரியா என்னும் இஸ்லாமிய சட்டத்தைக் கொண்டுவர அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். கடந்த 7-ம் தேதி, போகோ ஹராம் தீவிரவாதிகள் நடத்திய வெடிகுண்டு மற்றும் துப்பாக்கிச்சூடு தாக் குதலில், 14 பேர் கொல்லப்பட்டனர். இன்று, இரண்டு பெண்கள் நடத்திய தற்கொலைப் படை தாக்குதலில், 16 பேர் பலியாகியுள்ளனர். போர்னோ மாவட்டத்தில் நடந்த இந்தத் தாக்குதலில் பலர் படுகாயமடைந்துள்ளனர். இந்தத் தாக்குதலுக்கு இதுவரை எந்தத் தீவிரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. எனினும், பெண்களை வைத்து போகோ ஹராம் தீவிரவாதிகளே தற்கொலைத் தாக்குதல் நடத்துவதால், இதுவும் அவர்கள் சதி வேலையாக இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
ஊசி மூலம் தனது மேல் கை தசையை கிட்டத்தட்ட
மேலும்தலிபான் பயங்கரவாதிகளுடன் அமைதிக்கான
மேலும்அறுவை சிகிச்சை மூலம் கர்ப்பிணி வயிற்றில்
மேலும்கடந்த 2003ஆம் ஆண்டுக்கு பிறகு முதன்முறையாக
மேலும்