வட கொரியாவால் சிறைப்பிடிக்கப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்ட அமெரிக்க மாணவர் ஓட்டோ வாம்பையர், மரணமடைந்தார். அமெரிக்காவின் வர்ஜீனியா பல்கலைக்கழக மாணவர், ஓட்டோ வாம்பையர். இவருக்கு வயது 22. கடந்த ஆண்டு மார்ச் மாதம் வட கொரியாவுக்கு சுற் றுலா சென்றிருந்தார். அப்போது, அந்த நாட்டு உணவகம் ஒன்றிலிருந்து அரசின் பிரசார சுவரொட்டியைத் திருட முயன்றதாக, அவர் மீது குற்றம் சாட்டி, சிறையில் அடைத்தது வட கொரிய அரசு. அவருக்கு 15 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது. இதையடுத்து, அவரின் உடல்நிலை மோசமாகி கோமா நிலைக்குத் தள்ளப்பட்டதால், கடந்த வாரம் விடுவிக்கப்பட்டார். வட கொரியாவிலிருந்து விடுவிக்கப்பட்டு ஒரு வாரமே ஆன நிலையில், அமெரிக்காவில் மருத்துவ சிகிச்சை மேற்கொண்டுவந்த ஓட்டோ வாம்பையர், இன்று மரணமடைந்தார். ஓட்டோவின் இந்த நிலைக்கு, வட கொரிய அரசு செய்த சித்ரவதைகள்தான் காரணம் என அவரது குடும்பத்தினர் குற்றம் சாட்டி யுள்ளனர்.
நேற்று முன்தினம் ராணி எலிசபெத்தின் உடல் அங்குள்ள செயிண்ட் கில்ஸ்
மேலும்இங்கிலாந்தின் ராணியாக சுமார் 70 ஆண்டு காலம் ஆட்சி புரிந்த, இரண்டாவது
மேலும்வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்
மேலும்இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை
மேலும்16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை
மேலும்