பிரான்ஸ் நாட்டில் நடைபெற்ற காளைகளை அடக்கும் விழாவில் பிரபல வீரர் ஒருவர் துரதிஷ்டவசமாக பலியாகியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத் தியுள்ளது. மேற்கு பிரான்ஸில் உள்ள Aire-sur-l'Adour என்ற இடத்தில் நேற்று முன் தினம் காளையை அடக்கும் நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. பல்வேறு நாடுகளை சேர்ந்த சுற்றுலா பயணிகள் ஆர்வமாக பங்கேற்ற இந்நிகழ்ச்சியில் ஸ்பெயின் நாட்டை சேர்ந்த பிரபல வீரரான Ivan Fandino(36) என்பவரும் பங்கேற் றுள்ளார். பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற இவர் பல விருதுகளையும் பெற்று பிரபலமானவர். இந்நிலையில், நிகழ்ச்சி துவங்கியதும் காளையிடம் சண்டையிட நபர் தயாராகியுள்ளார். அப்போது, துரதிஷ்டவசமாக நபர் அணிந்திருந்த உடை அவரது கால்களை சுற்றியுள்ளது. இதில் நிலை தடுமாறிய அவரை காளை தனது கூர்மையான கொம்புகளால் குத்தியுள்ளது. ஆழமான காயம் ஏற்பட்ட நிலையில் அவர் அவசரமாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால், சிகிச்சை பலனில்லாத காரணத்தினால் பரிதாபமாக பலியானார். மருத்துவர்கள் வெளியிட்ட தகவலில் காளையின் கொம்பு அவரது நுரையீரலை சேதப்படுத்தி விட்டதாகவும், ஆம்புலன்ஸில் கொண்டு வரும்போது அவ ருக்கு இரண்டு முறை மாரடைப்பு ஏற்பட்டதால் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.
நேற்று முன்தினம் ராணி எலிசபெத்தின் உடல் அங்குள்ள செயிண்ட் கில்ஸ்
மேலும்இங்கிலாந்தின் ராணியாக சுமார் 70 ஆண்டு காலம் ஆட்சி புரிந்த, இரண்டாவது
மேலும்வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்
மேலும்இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை
மேலும்16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை
மேலும்