கொழும்பு: இலங்கையில் வடக்கு மாகாண முதல்வர் விக்னேஸ்வரனுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ள நிலையில், தமிழ் தேசிய கூட்டமைப்பு கட்சிகள் ஆதரவால் முதல்வரின் பதவி பறிபோகாது என அக்கட்சியின் மூத்த தலைவர் கூறி உள்ளார். இலங்கை வடக்கு மாகாணத்தின் வேளாண் துறை அமைச்சர் ஐங்கரநேசன், கல்வித் துறை அமைச்சர் குருகுலராஜா. இருவர் மீதும் ஊழல் குற்றச்சாட்டு எழுந்தது. இதைத்தொடர்ந்து இரு அமைச்சர்களையும் பதவி விலக முதல்வர் விக்னேஸ்வரன் உத்தரவிட்டார். இதற்கு மாகாண சபை உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆளுங்கட்சி கூட்டணியில் உள்ள 22 பேர் முதல்வர் விக்னேஸ்வரனுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தில் கையெழுத்திட்டு, ஆளுநர் ரெஜினால்ட் கூரேவிடம் கடந்த 15ம் தேதி அளித்தனர். இதனால் பெரும்பான்மையை நிரூபிக்க கவர்னர் உத்தரவிட்டுள்ளார். இந்தநிலையில் அவருக்கு தமிழ் தேசிய கூட்டணி முழு ஆதரவு அளிக்கும் என அக்கட்சியின் மூத்த தலைவர் சிவாஜிலிங்கம் கூறி உள்ளார். அவர் நேற்று அளித்த பேட்டியில், விக்னேஸ்வரனை பதவியில் இருந்து நீக்க முடியாது. தமிழ் தேசிய கூட்டமைப்பின் 4 கட்சிகளும் முதல்வருக்கு ஆதரவு அளிக்கும்’’ என்றார். மேலும் அவர், ஆளுநரை சந்தித்து விக்னேஸ்வரனை நீக்கக் கூடாது என வலியுறுத்தி உள்ளார்.
இலங்கையில் பொருளாதார நெருக்கடியில் இருந்து மக்களை மீட்க முடியாத
மேலும்அங்கஜன் இராமநாதன் கோரிக்கை
மேலும்ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சார்பில் முன்னாள் அதிபர் மைத்திரிபால
மேலும்அதிபர் கோத்தபாய அரசாங்கம் சிங்கள பௌத்த மக்களுக்காகவும் தமிழ், முஸ்லிம்
மேலும்