டோக்யோ ஜப்பான் கடல் பகுதியில் பிலிப்பைன்ஸ் நாட்டு சரக்கு கப்பலும் அமெரிக்க போர்க்கப்பலும் பயங்கரமாக மோதிக் கொண்டன. இதில் போர்க் கப்பலின் வலது புறத்தில் மிகப்பெரிய உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் புகுந்தது. இந்த விபத்தில் மாயமான 7 கடற்படை வீரர்களை தேடும் பணி தொடர்ந்து நடக்கிறது. ஜப்பான் தலைநகர் டோக்யோவுக்கு தென்மேற்கே இசு தீபகற்ப பகுதியில் ஏசிஎக்ஸ் கிறிஸ்டல் என்ற பிலிப்பைன்ஸ் நாட்டின் சரக்கு கப்பல் சென்று கொண்டிருந்தது. அப்போது ஜப்பானின் யோகோசுகாவில் உள்ள அமெரிக்க கடற்படை தளத்தில் இருந்து வழக்கமான பயிற்சிக்காக புறப்பட்டு சென்ற யுஎஸ்எஸ் பிட்ஸ் ஜெரால்டு என்ற போர்க்கப்பலும் நேற்று அதிகாலை 2.30 மணியளவில் இந்த பகுதியில் பயணம் செய்தது. அப்போது எதிர்பாராதவிதமாக இரு கப்பல் களும் பயங்கரமாக மோதிக் கொண்டன. இதில் போர்க்கப்பலின் வலப்புறத்தில் மிகப்பெரிய உடைப்பு ஏற்பட்டது. இதன் வழியாக கடல் தண்ணீர் கப்பலின் ஒரு பகுதிக்குள் ஊடுருவியது. இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் ஜப்பான் கடலோர காவல் படையின் 5 கப்பல்கள் உடனடியாக மீட்பு பணியில் ஈடுபட்டன. இந்த விபத்தில் காயம் அடைந்த கப்பலின் தலைமை அதிகாரி பிரைஸ் பென்சன் மற்றும் இரண்டு வீரர்கள் ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்பட்டு ஜப்பானின் யோகசுகா பகுதியில் உள்ள அமெரிக்க கடற்படை தள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். போர்க்கப்பலில் இருந்த 7 வீரர்களை காணவில்லை. அவர்கள் இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என தெரிகிறது. அவர்களை தேடும் பணி நடக்கிறது. பிலிப்பைன்ஸ் சரக்கு கப்பலில் 20 ஊழியர்கள் இருந்தனர். அவர்கள் யாரும் இந்த விபத்தில் காயம் அடையவில்லை. சேதம் அடைந்த அமெரிக்க போர்க் கப்பல் இழுவை படகுகள் மூலம் யோகோசுகாவில் உள்ள அமெரிக்க கடற்படை தளத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.
நேற்று முன்தினம் ராணி எலிசபெத்தின் உடல் அங்குள்ள செயிண்ட் கில்ஸ்
மேலும்இங்கிலாந்தின் ராணியாக சுமார் 70 ஆண்டு காலம் ஆட்சி புரிந்த, இரண்டாவது
மேலும்வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்
மேலும்இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை
மேலும்16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை
மேலும்