img
img

போர்ச்சுக்கலில் பயங்கர காட்டுத்தீ: 43 பேர் பலி, 16 பேர் காயம்
ஞாயிறு 18 ஜூன் 2017 16:38:35

img

லிஸ்பன், தெற்கு ஐரோப்பிய நாடான போர்ச்சுக்கலில் கடும் வெப்பம் நிலவுகிறது. 104 பாரன்ஹீட்டை தாண்டி வெப்பம் நிலவுவதால் அங்குள்ள வனப்பகுதிகளில் காட்டுத்தீ ஏற்பட்டு வருகிறது. நாடு முழுவதும் கடுமையான வெப்பக்காற்று வீசுவதால் அங்குள்ள 60 க்கும் மேற்பட்ட வனப்பகுதிகளில் சனிக்கிழமை இரவு தீ விபத்து ஏற்பட்டது. வனப்பகுதியில் ஏற்பட்ட தீயை அணைக்கும் பகுதியில் தீ அணைப்பு படையினர் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில், போர்ச்சுகலின் மத்திய பகுதியில் உள்ள பெட்ரோகா கிரேண்டே என்ற இடத்தில் உள்ள வனப்பகுதியில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தின் போது வனப்பகுதியில் உள்ள சாலை வழியாக சென்ற காரில் சென்று கொண்டிருந்த பயணிகள் சிக்கி கொண்டனர். பயங்கர தீ விபத் தால் காருக்குள் இருந்தபடியே பலர் பலியாகினர். தற்போதுவரை 43 பேர் பலியானதாகவும் 16 பேர் காயம் அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள் ளது. இந்த தீ விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சுவதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான வாகன ஓட்டிகள் காரில் இருந்தபடியே தீ யில் சிக்கி பலியானதாக கூறப்படுகிறது. 60-க்கும் மேற்பட்ட வனப்பகுதிகளில் ஏற்பட்ட தீயை அணைக்கும் பணியில் 1700-க்கும் மேற்பட்ட தீ அணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். வனப்பகுதியை ஒட்டியுள்ள கிராமத்தில் வசிக்கும் தீயில் சிக்கி கொண்டுள்ளதாகவும் அவர்களை மீட்கும் பணியும் மும்முரமாக நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. போர்ச்சுகலுக்கு உதவ, நெருப்பை அணைக்கும் இரண்டு விமானங்களை ஸ்பெயின் அனுப்பியுள்ளது. அண்மைக்காலங்களில் போர்ச்சுக்கலில் ஏற்பட்ட மிகப்பெரும் சோக சம்பவம் இது என போர்ச்சுக்கல் பிரதமர் தெரிவித்துள்ளார்.

பின்செல்

உலகச் செய்திகள்

img
ராணி எலிசபெத் உடலுக்கு அஞ்சலி செலுத்த நாள் கணக்கில் காத்துக்கிடக்கும் மக்கள்

நேற்று முன்தினம் ராணி எலிசபெத்தின் உடல் அங்குள்ள செயிண்ட் கில்ஸ்

மேலும்
img
ராணி எலிசபெத் மறைவு ஒரு சகாப்தத்தின் முடிவு

இங்கிலாந்தின் ராணியாக சுமார் 70 ஆண்டு காலம் ஆட்சி புரிந்த, இரண்டாவது

மேலும்
img
வெவ்வேறு ஆண்டுகளில் வெவ்வேறு தசாப்தங்களில் பிறந்த இரட்டையர்கள்

வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்

மேலும்
img
பத்திகையாளர் ஜமால் கசோகி கொலை வழக்கில் 5 பேருக்கு தூக்குத் தண்டனை

இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை

மேலும்
img
16 ஆயிரம் வீரர்களுடன் அமெரிக்காவில் விண்வெளி படை

16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img