ஆப்கானிஸ்தானில் கடந்த 3 மாதங்களில் 700 ஐ.எஸ் தீவிரவாதிகள் கொல்லப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த சில வருடங்களாக ஐ.எஸ் தீவிரவாத அமைப்பு பெரிய அளவில் தாக்குதல்களை நடத்தி வருகிறது. மத்திய கிழக்கு நாடுகள், இங்கிலாந்து, பிரான்ஸ், எகிப்து என தொடர் தாக்குதலை ஐ.எஸ் இயக்கத்தினர் நடத்தி வருகின்றனர். இதையடுத்து இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக ஒன்றிணைந்து செயல்படுவதாக அறிவித்துள்ளனர். இந்நிலையில், ஆப்கானிஸ்தானில் தொடர்ச்சியாக வெடிகுண்டு தாக்குதல்களை நடத்தி, ஆக்கிரமிப்பு செய்துவரும் ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக அந் நாட்டு ராணுவம் முழுவீச்சில் செயல்பட்டு வருகிறது. இது குறித்து ஆப்கானிஸ்தான் ராணுவ அதிகாரி சமான் வஸீரி கூறுகையில், 'கடந்த 3 மாதங்களில் சுமார் 700 ஐ.எஸ் தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர். மேலும், ஐ.எஸ் இயக்கத்தினர் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகளை ராணுவத்தினர் மீட்டு வரு கின்றனர்' என்று கூறியுள்ளார். ஐ.எஸ் இயக்கத்தின் தாக்குதல்கள் தடுப்பதில் ஆப்கான் படைகளுடன் அமெரிக்க படைகள் இணைந்து செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
நேற்று முன்தினம் ராணி எலிசபெத்தின் உடல் அங்குள்ள செயிண்ட் கில்ஸ்
மேலும்இங்கிலாந்தின் ராணியாக சுமார் 70 ஆண்டு காலம் ஆட்சி புரிந்த, இரண்டாவது
மேலும்வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்
மேலும்இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை
மேலும்16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை
மேலும்