வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனை பதவியிலிருந்து நீக்கும் எண்ணம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு இல்லை என்பதை, சம்பந்தன் அனுப்பிவைத்த கடிதம் வாயிலாக புலப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தக் கடிதத்தில், ''இந்த சம்பவங்களை முடிவிற்குக் கொண்டுவர வேண்டுமெனில் தேவையான திருத்த நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்'' என்பது எனது கருத்தாகும்' என சம்பந்தன் குறிப்பிட்டுள்ளார். மேலும், 'நீங்கள் (முதலமைச்சர்) எதிர்காலத்தில் மேற்கொள்ளும் விசாரணைகளுக்கு எவ்வித தடையும் ஏற்படாது என்பதனையும் கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.' என்று சம்பந்தன் குறிப்பிட்டுள்ளார். எனினும், முதலமைச்சர் பதவி விலக வேண்டும் என்ற நிலைப்பாட்டில் வட மாகாண சபையின் தமிழரசுக் கட்சி உறுப்பினர்கள் பலர் உறுதியாக இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் பொருளாதார நெருக்கடியில் இருந்து மக்களை மீட்க முடியாத
மேலும்அங்கஜன் இராமநாதன் கோரிக்கை
மேலும்ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சார்பில் முன்னாள் அதிபர் மைத்திரிபால
மேலும்அதிபர் கோத்தபாய அரசாங்கம் சிங்கள பௌத்த மக்களுக்காகவும் தமிழ், முஸ்லிம்
மேலும்