கொலை குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) விடுதலை செய்யப் படக் கூடிய வாய்ப்பு உள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் மேலும் இரண்டு சந்தேக நபர்களை அவசியம் கைது செய்யவேண்டிய போதிலும் அவர்களை இதுவரை கைது செய்ய முடியவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. குற்றவாளிகள் என சந்தேகிக்கப்பட்ட அந்த மர்ம நபர்கள் இருவரினதும் சரியான பெயர் விபரங்கள் கூட தெரியாத நிலையில் அவர்களை கைது செய்வதில் சிரமங்கள் ஏற்பட்டுள்ளன. இந்த கொலை தொடர்பில் பிள்ளையான் உட்பட சந்தேக நபர்கள் ஐந்து பேர் கைது செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்ட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. கொலையில் சம்பந்தப்பட்ட அந்த இரு முக்கிய சந்தேகப் பேர்வழிகளும் கைது செய்யப்படாவிட்டால் கொலைய உறுதிப்படுத்துவதில் பெரும் சிக்கல் இருப்பதால் பிள்ளையான் விடுதலை செய்யப்படக் கூடிய வாய்ப்பு உள்ளதாக போலீஸ் தரப்பின் தகவல்வழி கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
இலங்கையில் பொருளாதார நெருக்கடியில் இருந்து மக்களை மீட்க முடியாத
மேலும்அங்கஜன் இராமநாதன் கோரிக்கை
மேலும்ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சார்பில் முன்னாள் அதிபர் மைத்திரிபால
மேலும்அதிபர் கோத்தபாய அரசாங்கம் சிங்கள பௌத்த மக்களுக்காகவும் தமிழ், முஸ்லிம்
மேலும்