ஜெனீவா: ஐ.எஸ். தீவிரவாதிகள் மனித கேடயமாக ஒரு லட்சம் பேரை பிடித்து வைத்து உள்ளதாக ஐ.நா. சபை தெரிவித்து உள்ளது அதிர்ச்சியை ஏற் படுத்தியுள்ளது. கடந்த 2014-ம் ஆண்டு ஈராக்கின் மொசூல் நகரை ஐ.எஸ். தீவிரவாதிகள் கைப்பற்றினர். இதனையடுத்து வெளிநாட்டு படைகள் உதவி யுடன் ஈராக் படை மொசூல் நகரை மீட்க போராடி வருகிறது. இதனால் நடந்து வரும் போரில் பொதுமக்களும் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர். தப்பியவர்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். இந்நிலையில் பழமையான மொசூல் நகரில் ஒரு லட்சம் மக்களை ஐ.எஸ். அமைப்பு மனித கேடயமாக பிடித்து வைத்து உள்ளது என ஐ.நா. தெரிவித்து உள்ளது. சண்டை நடைபெறும் மொசூல் நகருக்கு வெளிப்பகுதியில் மக்களை ஐ.எஸ். தீவிரவாதிகள் பிடித்து வைத்து உள்ளனர் என ஐ.நா.வின் அகதிகள் அமைப்பு தெரிவித்து உள்ளது. மேலும் ஜிகாதிகள் தங்கள் வசமிருக்கும் பகுதியில் இருந்து வெளியேற முயற்சி செய்பவர்களை கொன்று வருகிறார்கள். அப்படியிருந்தும் சிலர் உயிர் தப்பி வெளியே வருகிறார்கள் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. பொதுமக்கள் மிகவும் மோசமான சூழ்நிலையில் பதற்றத்துடன் உள்ளனர். அவர்களை சுற்றி அனைத்து பகுதியிலும் சண்டைதான் நடக்கிறது. . மேலும் போரினால் மொசூல் நகரில் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப் பட்டு உள்ளனர் என கூறி உள்ள ஐ.நா.சபை முகாம்களில் 5 லட்சம் மக்களுக்கு உதவி செய்து வருவதாக ஐநா தகவல் தெரிவித்துள்ளது.
நேற்று முன்தினம் ராணி எலிசபெத்தின் உடல் அங்குள்ள செயிண்ட் கில்ஸ்
மேலும்இங்கிலாந்தின் ராணியாக சுமார் 70 ஆண்டு காலம் ஆட்சி புரிந்த, இரண்டாவது
மேலும்வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்
மேலும்இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை
மேலும்16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை
மேலும்